பாஜக.,வின் அடையாளமாகும் காவி நிற தொப்பி

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியினர் சிவப்பு நிறத்தொப்பிகளை அணிந்து தங்களுக்கு எனஓர் அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளனர். இது போல் பாஜகவினரும் குஜராத் தேர்தல்பிரச்சாரம் முதல் காவி நிறத் தொப்பி அணிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய நிகழ்ச்சிகளில் பல்வேறுநிற தலைப்பாகை அணியும்வழக்கம் பாஜக தலைவர்கள் மத்தியில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையில் சுதந்திரஉரையின் போதும் இவ்வாறு தலைப்பாகை அணிந்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் குஜராத் தேர்தலையொட்டி பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கும் வகையில் அகமதாபாத்தில் பிரதமர் மோடி அண்மையில் ஊர்வலம் நடத்தினார். அதில் பிரதமர் மோடி தலைப்பாகைக்கு பதிலாக காவி நிறத் தொப்பி அணிந்திருந்தார். இதையடுத்து குஜராத்தில் பிரச்சாரம் செய்யும் பாஜகவினர் காவி நிறத் தொப்பி அணிவது என்ற யோசனை அக்கட்சிக்கு உருவாகி விட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் பாஜக தலைவர்கள் முதல், எம்.பி., எம்எல்ஏ மற்றும் தொண்டர்கள்வரை அனைவரும் காவி நிறத்தொப்பி அணிய முடிவு செய்யபட்டுள்ளது. இதற்காக ஒரேவடிவில், சிறப்புவகை காவித்தொப்பி தயாராகி வருகிறது. கட்சியின் சின்னமாக தாமரை முத்திரையுடன் கூடிய இந்த தொப்பி இனிபாஜகவினரின் அடையாளமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. முதல்கட்டமாக இதை பாஜக எம்.பி.க்கள் அணியஉள்ளனர். இதற்காக கட்சித்தலைமை அவர்களுக்கு 5 தொப்பிகள் உள்ளிட்ட சிலபொருட்களுடன் ஒரு பை அளிக்க உள்ளது. பிறகு படிப்படியாக கட்சி நிர்வாகிகளும் இதனை அணியவுள்ளதாக கூறப்படுகிறது.

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்அமைப்பினர் காவி நிறக் குல்லா அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போதுகூட அதன் கூட்டங்கள் மற்றும் ஷாக்கா எனப்படும் உடற்பயிற்சி முகாம்களிலும் அவர்கள் தொப்பி அணிகின்றனர். இதுவே தற்போது குஜராத் எம்.பி. ஒருவரின் யோசனையால் சிலமாற்றங்களுடன் பொதுமக்களையும் கவரும் வகையில் அறிமுகமாகிறது.

சுதந்திர போராட்டக் காலங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் வெள்ளை நிறத்தொப்பி அணிவது வழக்கமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகும் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பெருந்தலைவர்களும் வெள்ளை நிறத்தொப்பி அணிந்தனர். பிறகு இந்த வழக்கம் காங்கிரஸாரிடம் குறைந்து விட்டது. தற்போது ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கட்சியின் முக்கிய சில நிகழ்ச்சிகளில் மட்டும் வெண்ணிற தொப்பி அணிகின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.