இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்றனர். முன்னதாக ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை வீரர்களால் அழைத்து வரப்பட்டார்
ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.இந்ததேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ராம்நாத்கோவிந்த் 65 சதவீத ஓட்டுகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, பார்லிமென்ட் மையமண்டபத்தில் ஜனாதிபதி பதவியேற்பு விழா நடந்தது.இன்று மதியம் 12 மணியளவில் ராம்நாத்கோவிந்த் தனது மனைவியுடன் ராஜ்காட் சென்று, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர் ஜனாதிபதி மாளிகைசென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்.
பின்னர் இருவரும் ஒரேகாரில் பார்லிமென்ட் மைய மண்டபத்திற்கு குதிரைப்படை வீரர்கள் அழைத்து சென்றனர். அங்கு, ராம்நாத் கோவிந்தை துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ராமகாஜன் ஆகியோர் வரவேற்றனர்.
12. 15 மணியளவில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு பிரணாப் வாழ்த்து தெரிவித்தார்.பதவியேற்ற நேரத்தில் 21 குண்டுகள் முழங்கின.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.