உலகிலேயே சகிப்புத் தன்மை உள்ள நாடு இந்தியாதான் என சகிப்புத்தன்மை குறித்து துணை ஜனாதிபதி பதவி காலத்தை நிறைவுசெய்த ஹமீது அன்சாரி பேச்சுக்கு மறைமுகமாக துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள வெங்கையாநாயுடு பதிலடி கொடுத்துள்ளார் .
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி தனது பணிகாலம் நிறைவடைந்ததை யடுத்து புதிய துணைஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்க உள்ளார். ஹமீது அன்சாரி இன்று பேசுகையில், பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்களால் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.
இதுதொடர்பாக வெங்கையா நாயுடு கூறியது, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என சிலர் கூறிவருகின்றனர். இது வெறும் அரசியல் பிரசாரம். உலக அளவில் ஒப்பிடுகையில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு மிக்க நாடாக இந்தியா உள்ளது. அந்த வகையில் உலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்தியா தான். ஜனநாயகம் வெற்றியடைந்து வருவதே சகிப்புதன்மை இருப்பதால் தான் என்றார்.
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.