டெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டும்

டெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டும்''  எனத் தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக பி.ஜே.பி. சார்பில், சென்னை டி.பி.சத்திரம் அருகே உள்ள காமராஜர்நகரில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டது.  அதில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நில வேம்புக் கஷாயம் வழங்கிப்பேசிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், ''தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் அதிகமாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் டெங்குகாய்ச்சல் மற்றும் வி‌ஷக்காய்ச்சல் இருக்கிறது. தமிழக அரசு இதை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். சாதாரண மருத்துவ மனைகளில் கூட காய்ச்சல் வார்டுகளைத் தொடங்கவேண்டும்.

தனியார் மருத்துவ மனைகளிலும் டெங்குகாய்ச்சல் மற்றும் வி‌ஷக்காய்ச்சல் வார்டுகள் தொடங்கப்பட வேண்டும். தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறினாலும், இப்போது உள்ள நோயின் வீரியத்துக்குப் போதுமானதாக இல்லை. டெங்குகாய்ச்சலுக்கு சுகாதாரமின்மையே காரணம். உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்குகாய்ச்சல் அதிக அளவில் பரவக்காரணம். டெங்குக் காய்ச்சலை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டு வரவேண்டும். பொதுமக்களும் காய்ச்சல்வந்தால் இரண்டு மூன்று நாள்களில் குணமாகிவிடும் என்று இருந்துவிடாமல், ஆரம்ப நிலையிலேயே அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...