பாஜக வலிமை பெற்றுவருகிறது

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தமிழக பாஜக மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 22 வார்டுகளிலும், நகராட்சிவார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 56 வார்டுகளிலும், பேரூராட்சிவார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 230 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளது. ஆக, 308 வார்டு உறுப்பினர்களை இந்தத் தேர்தலில் தமிழக பாஜக பெற்றுள்ளது.

மாநகராட்சிகளை எடுத்துக்கொண்டால் கன்னியாகுமரியில் 11 வார்டுகளிலும், திருப்பூரில் 2 வார்டுகளிலும், கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் வேலூரில் தலா ஒருவார்டை பாஜக கைப்பற்றியுள்ளது.

நகராட்சிகளை எடுத்துக்கொண்டால் கன்னியா குமரியில் 21 வார்டுகள், தென்காசியில் 12 வார்டுகள், தேனியில் 4 வார்டுகள், ராமநாதபுரம் மற்றும் திருப்பூரில் தலா 3 வார்டுகள், ஈரோட்டில் 2 வார்டுகள், கரூர், கோவை, சிவகங்கை, தஞ்சை, திருப்பத்தூர், தூத்துக்குடி, நாமக்கல், ராணிப் பேட்டை, விருதுநகர் மற்றும் வேலூர் ஆகியவற்றில் தலா ஒருவார்டை வென்றுள்ளது.

பேரூராட்சிகளை பொறுத்தவரையில் கன்னியாகுமரியில் 168 வார்டுகளிலும், ஈரோடு, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடியில் தலா 6 வார்டுகளிலும், கோவை மற்றும் நீலகிரியில் தலா 5 வார்டுகளிலும், தென்காசி மற்றும் தேனியில் தலா 4 வார்டுகளிலும், சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் சேலத்தில் தலா 3 இடங்களிலும், கரூர், தஞ்சாவூர், ராமநாதபுரத்தில் தலா 2 இடங்களிலும், அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருவாரூரில் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றது.

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தமிழக பாஜக தனித்து போட்டியிட்டது குறிப்பிடதக்கது. இந்தத்தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, “பாஜக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை வெல்லாத இடங்களிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளது. மூலை முடுக்கெல்லாம் தாமரையை மலரச்செய்கிறோம். இந்த வெற்றியானது பிரதமர் மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்பை வெளிப் படுத்துகிறது. பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. தமிழக மக்கள் பாஜகவை முழுமையாக ஏற்றுக் கொண்டனர். பாஜகவை முழுமையாக ஏற்றுபயணிக்க மக்கள் தயாராகிவிட்டனர். நினைத்த வெற்றியை அடைந்துவிட்டோம். இனி பாஜகவுக்கு ஏறுமுகம்தான். வருகின்ற காலம் நிச்சயமாக பாஜகவின் காலம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

எங்களின் வலிமையை உணர்த்துவதற்காகவே, இந்தத் தேர்தலில் தனித்து களம்கண்டோம். கடின உழைப்பால் இப்போது 3-வது இடத்திற்கு வந்துள்ளோம். தமிழகத்தில் பாஜக மூன்றாவது கட்சியாக உருவெடுத்துள்ளது. எங்கள் வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த தலைவர்களுக்கு நன்றி. பலஇடங்களில் நாங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், நாங்கள் பெற்ற வாக்கு சதவீதம் மகிழ்ச்சியை கொடுக்கிறது. மக்கள் நலன்சார்ந்த அரசு திட்டங்களை பாஜக உறுதுணையாக இருந்து ஆதரிக்கும். பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் சோர்ந்துவிடவேண்டாம். தொடர்ந்து பயணிப்போம்” என்று கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், “பாஜகவின் வலிமையை உணர்த்தவே தனித்துப் போட்டியிட்டோம். அதேநேரம் அதிமுகவுடனான தேசிய கூட்டணி தொடரும். பாஜக வலிமை பெற்றுவருகிறது. ஒரு தேர்தலில் பின் தங்கிவிட்டது என்பதற்காக அதிமுகவை குறைத்து மதிப்பிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிறப்பின் அடிப்படையில் திமுக த ...

பிறப்பின் அடிப்படையில் திமுக தலைமை நவீன தீண்டாமை தெலுங்கர்கள் பற்றி சர்ச்சையாகபேசிய கஸ்தூரிக்கு திமுக எம்பி ஆ ...

இந்தியா – சவூதி அரேபியா உறவுக ...

இந்தியா – சவூதி அரேபியா உறவுகளை வலுப்படுத்தும் வெற்றிகரமான பயணத்தை பியுஷ் கோயல் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமா ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமானார் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், இந்தியப் பொருளாதார நிபுணருமான ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோ ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோடி காங்கிரசை சாடல் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால், அதனை ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முத ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முதலமைச்சருக்கு என்ன தயக்கம் L. முருகன் கேள்வி தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? ...

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி ...

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார் குஜராத் மாநிலம் கட்ச் எல்லைப்பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...