தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர்களின் படிப்பு, பயிற்சி, பணி, பாதுகாப்பு, நெறிமுறைகளை உருவாக்கிச் செயல்படுத்தும் அதிகாரம் பெற்ற அமைப்பு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களால், தங்களைத் தாங்களே, நிர்வாகம் செய்து கொள்ளும், அதிகாரம் பெற்ற சுயசார்பு அமைப்பாகும். அதில் ஆளும் கட்சியோ, அல்லது வேறு எந்த அமைப்புக்களும் தலையிட அதிகாரம் இல்லை.
ஆனால் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற அரசு மருத்துவார்களே இதில் பெரும்பலும் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர். தமிழக மருத்துவ கவுன்சிலுக்கு கடந்த 19 10 2022. அன்று தேர்தல் அறிவிப்பு வெளியானது. தேர்தல் தபால் வாக்கு சீட்டு மூலம் 19 12 2022 இருந்து 19 1 2023 வரை நடைபெற உள்ளது
சுமார் ஒன்றரை லட்சம் மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ள, அனைத்து மருத்துவர்களையும், கட்டுப்படுத்தக்கூடிய வலிமை பெற்ற அதிகாரம் உள்ள இந்த அமைப்புக்கு ஜனநாயகமுறையில் தேர்தெடுக்கப்பட்ட மருத்துவர்கள் ஏழு பேர் அங்கத்தினராக பதவி ஏற்க உள்ளனர். தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வெளியிடப்படவேண்டிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. மிகுந்த வற்புறுத்தலுக்கு பின்பு கிடைத்த வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள். அதிலும் சுமார் 117 இறந்த மருத்துவர்களின் பெயர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன மறைந்த தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங் தலைவராக இருந்த டாக்டர் ஜெயசீலன் மத்தியாஸ் டாக்டர் டி கே கணேசன் டாக்டர் கருணாநிதி போன்றவருடைய பெயர்கள் இந்த வாக்காளர் பட்டியலில் உள்ளது.
சரியான வாக்காளர் பட்டியல் இல்லாமல் தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்தப்படுவது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது. மருத்துவர்கள் தங்களுக்கு வாக்கு உரிமையை, உறுதி செய்து கொள்ள ஏஎதுவாக வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படவில்ல இப்படிப்பட்ட பல ஐயப்பாளர்களைக் கொண்ட இந்த தேர்தல் முறையாக சரியாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
இந்தத் தேர்தல் தபால் வாக்கு சீட்டு முறையில் தான் தற்பொழுது நடத்தப்பட உள்ளது தபால் மூலம் நடத்தப்படும் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது ஆகையால் அதுஆன்லைன் முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது பெரும்பாலான மருத்துவர்களின் கருத்தாக உள்ளது
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ள ஒன்றரை லட்சம் உறுப்பினர்களில் 19,500 பேர் அரசு மருத்துவர்கள் ஆவர். நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்களும் அரசு மருத்துவர்களாகவே இருக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக அரசியல் பின்னணி மற்றும் செல்வாக்குடைய சில அரசு மருத்துவர்கள் மட்டுமே கவுன்சில் நிர்வாகிகளாக பதவிக்கு வந்துள்ளனர். என்று கூறி இதை நீதிமன்றம் தடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவானது, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு குறித்து இரண்டு வாரங்களில் தமிழக அரசும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையையும் அவர் தள்ளிவைத்தார்.
மேலும் இந்த தேர்தலை நடத்தக்கூடிய பதிவாளர் என்னும் பதிவாளர் நியமனமும் முறைப்படி நடைபெறவில்லை என்று தெரிய வருகிறது அவர் 63 வயதாகியும் இந்த பணியில் தொடர்கிறார் அதற்குரிய உத்தரவை முறையான படி அரசிடம் பெற்றதாக இந்த தகவலும் இல்லை. ஆகவே இப்படிப்பட்ட ஒரு பதிவாளரை வைத்துக் கொண்டு தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டுமென்றால் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நடைபெற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இதுவே பெரும்பாலான மருத்துவர்களின் விருப்பமும் ஆகும்.
நன்றி பாஜக மாநிலத் தலைவர்
அண்ணாமலை
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |