ஸ்டாலினால் அரசியலில் பிழைக்க முடியாததால் தமிழ் பற்றாளர் போல் நடந்து கொள்கிறார் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மும்மொழி கொள்கையை திணிக்கும் முயற்சியை திமுக முறியடிக்கும் என அக் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட்தேர்வு மற்றும் நவோதயா பள்ளிகள் மூலம் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதே பா.ஜ.க. அரசின் கொள்கை, செயல் திட்டமாக உள்ளது என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார். அதாவது தமிழகத்தில் மீண்டும் தமிழ் மொழியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய நினைப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் அரசியலில் பிழைக்க முடியாமல் போனதால் ஸ்டாலின் போன்றோர் தமிழ் பற்றாளர்கள் போல் நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். ஸ்டாலினை விட பாஜக வினருக்கு தமிழ் மீது அதிக மரியாதையும் மதிப்பும் உண்டு என்றும் அவர் கூறினார். மேலும் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை கற்றுகொடுக்க வில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.