கார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்த மக்கள் பணம் எப்படி வசூலிக்கப்படுகிறது?

8 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது என டெக் மஹிந்த்ராவும் 1100 கோடி பாக்கி என எரிக்சன் நிறுவனமும் அனில் அம்பானி தலைமையிலான ரிலையனஸ் கம்யுனிகேசன்ஸ் மீது திவால் நடவடிக்கை வழக்கு பதிந்துள்ளன.

ரிலையனஸ் கம்யூனிகேசன்ஸ் மொத்த கடன் 45,000 கோடி. இதிலே 7,000 கோடிக்கு பாதி கம்பெனியையே விற்றுவிடுவதாக அனில் அம்பானி குழு தெரிவித்துள்ளது. 19,000 கோடியை கம்பெனியின் சொத்துக்களை விட்டு கட்டிவிடுவதாகவும் சொல்லி விற்பதற்கான வேலைகளை தொடங்கியுள்ளது.

ஜேபி இன்ப்ரா கம்பெனியின் 2,000 கோடி கடனுக்கு எல்லா சொத்துக்களையும் விற்று கடனை கட்டு என சுப்ரீம்கோர்ட்டே சொல்லிவிட்டது.

எஸ்ஸார் மற்றும் இன்னபிற கார்ப்பரேட்டுகளின் கடனை தள்ளுபடி எல்லாம் செய்யமுடியாது, கடன் கொடுத்த வங்கிகள் தான் வசூலிக்கவேண்டும், வசூலித்தே ஆகவேண்டும். கடன் வசூலிப்பதை பொறுத்துத்தான் மேற்கொண்டு பணம் தரப்படும் என அருண் ஜெட்லி திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

எத்தணை கம்பெனி திவால் ஆனால் என்ன கொடுத்த பணம் வந்தாகவேண்டும் என வங்கிகள் வசூல் வேட்டையை தொடங்கியிருக்கிறன. இதுவரை 100 என கணக்கு சொல்கிறது.

ரகுராம் ராஜன் காலத்திலே யாரு கடன் வாங்கினாங்க என சொல்லமாட்டோம் அது ராணுவ ரகசியம், எந்த எவ்வளவு கடனை யாருக்கு தள்ளுபடி செய்தது எனவும் சொல்லமாட்டோம் என ஊரை அடித்து உலையிலே போட்டுக்கொண்டிருந்தது இப்போது இல்லை. சுப்ரீம் கோர்ட்டே கேட்டும் ரகுராம் ராஜன் சொல்லவில்லை என்பது தான் இதிலே கவனிக்கவேண்டியது.

இப்போது ரிசர்வ் பேங்கே அந்த தகவல்களை அதிகார பூர்வமாக வெளியிடுகிறது. இதுக்குத்தான் ராஜன் வேண்டும் வேண்டும் என குதித்தார்களா?

கார்ப்பரேட்டுகளும் வேலை போகும், அதாகும் இதாக்கும் என மிரட்டியே மேலும் மேலும் மக்கள் பணத்தை கடனாக வாங்கிக்கொண்டிருந்ததும் இல்லை.

அதேபோல் இந்த நீதிமன்றத்திலே 4 வழக்கு அந்த நீதிமன்றத்திலே 10 வழக்கு என போட்டு 10 வருடமாக இழுத்தடிக்கும் வேலையும் கிடையாது.

தேசிய கம்பெனி சட்ட தீர்வாணையம் உடனுக்குடன் வழக்குகளை முடித்துவைக்கிறது. பத்து அமர்வுகள், 16 நீதிபதிகள் மற்றும் 6 தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்ட தீர்வாணையம் தினமும் 200 மேற்பட்ட வழக்குகளை முடித்து வைக்கிறது.

கடனை வசூலிக்கமுடியாத சூழ்நிலை என்றால் வங்கிகளை கடனை அதை வசூலிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு விற்றுவிடலாம். அதன்பின்னர் அந்த இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகளும் கடனை கட்டினால் என்ன வசூலித்தால் என்ன வங்கிகளுக்கு வரும் பணம் வந்துவிடும்.

அடுத்த ஆறுமாதத்திற்குள் ஒட்டுமொத்த கடன் வசூலும் நடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

இதனால் என்ன பலன் என கேட்கலாம். சும்மா கொடுத்த கடனை வசூலிக்க இப்படி ஒரு விளம்பரமா என.

இனி கடன் வாங்குவோரும் கடன் கொடுப்போரும் தைரியமாக வாங்கலாம் கொடுக்கலாம். ஏன்னா வழக்கு விசாரணை என 20 வருடம் பொழைக்கவும் விடாம சாகவும் விடாம செய்யும் சித்ரவதை கிடையாது.

லாபமா கடனை திரும்ப கட்டிவிடலாம். நட்டமா சொத்தை வித்து கடனை வங்கிகள் வசூலிக்கும். மேலைநாடுகளிலே சிங்கப்பூரிலே எப்படியோ அதே போல் இங்கும் சட்டம் தன் கடமையை செய்யும்.

சட்டம் அதன் கடமையை செய்வதையே பாராட்டவேண்டிய சூழ்நிலையிலே தான் நாம் 70 வருடமாக இருந்திருக்கிறோம் என்பதே நாட்டிலே ஏன் வறுமை இருக்கிறது, மழைக்கே மக்கள் அஞ்சும் சூழ்நிலை ஏன் என சொல்லும்.

இனி அடுத்து என்ன?

வேலை வாய்ப்பு, ஆட்களை வேலைக்கு எடுத்தல், சரியான சம்பளம், தொழிலாளர் ஆணையம் உட்பட இருக்கும் அரதப்பழசு சட்டங்களையும் ஆமைகளையும் துரத்த வேண்டியது தான்.

தொழிலாளர் சட்டங்கள் மட்டும் 250க்கும் மேலாம். இதிலே எங்கே வேலைவாய்ப்பை உருவாக்கி நாட்டை முன்னேற்றுவது?

எப்படி 7 சட்டங்கள் ஏகப்பட்ட கோர்ட்டுகள் என இருந்த கடன் வசூலை ஒரே சட்டம் ஒரே நீதிமன்றம் என மோடி மாற்றினாரோ அதே போல

ஒரே தொழிலாளர் நல சட்டம் அதுக்கு ஒரே ஒரு தீப்பாணையம் என மாற்றுவார்.

அதன் பின்பு கம்பெனி நடத்த, ஆட்களை வேலைக்கு வைக்க பயப்படவேண்டியதில்லை. சிறு குறு தொழில்களுக்கு பெரும் முன்னேற்றமாக இருக்கும்.

நன்றி ராஜ சேகர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...