பணமதிப்பு நீக்கம், கறுப்புபண ஒழிப்பு மூலம் நாட்டை காப்பாற்றியுள்ளது பாஜக அரசு என மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டுவிழா சென்னை ஆழ்வார் பேட்டை மியூசிக் அகடமியில் நடைபெற்று வருகிறது. இந்தவிழாவில் கலந்துகொண்டு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, புத்தகங்களை வெளியிட்டு உரை நிகழ்த்தினார்.
மூத்த பத்திரிக்கையாளர் சோ விட்டுசென்ற பணிகளை குருமூர்த்தி போன்ற சிலரால் மட்டுமே கையாளமுடியும். ஊழல் ஒழிப்புக்கான மிகமுக்கிய நடவடிக்கைதான் பணமதிப்பு நீக்கம். கடினமான மனநிலையில்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பணமதிப்பு நீக்கம், கறுப்புபண ஒழிப்பு மூலம் நாட்டை பாஜக அரசு காப்பாற்றியுள்ளது. ஒருகுடும்பமே நாட்டை ஆட்சி செய்து கைப்பற்றி வைத்திருந்தது. மோடி ஆட்சிக்குமுன் இருந்த அரசு மக்களுக்கு உதவாத அரசாகவே இருந்தது.
பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரித்துள்ளது. நாட்டின் வரி வருவாய் அதிகரித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி பட்டியலில் 7-வது இடத்தில் இருந்தஇந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பொருளாதாரத்தில் நாடு வேகமாகவளர்ந்து வருகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் சமூக, பொருளாதார கட்டமைப்பில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும்.
நாட்டில் எதிர்புணர்வை தூண்டுவது சிலசூழ்ச்சி சக்திகள் தான். நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என குரல் கொடுப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது என ஜேட்லி தெரிவித்தார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.