நான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் தலைமையில் 7 எதிர்க் கட்சிகள், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கடந்த வெள்ளிக் கிழமை நோட்டீஸ் கொடுத்தன. இதை கடந்த திங்கட் கிழமை அவர் நிராகரித்தார். இது அவசரகதியில் எடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்நிலையில் பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் நிராகரத்ததற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் உச்சநீதிமன்ற வக்கீல்கள் 10 பேர், வெங்கையா நாயுடுவை நேற்று சந்தித்தனர். அவர்களிடம் வெங்கையாநாயுடு கூறியதாவது:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது எதிர்க் கட்சிகள் பதவி நீக்கதீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியான திலிருந்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்தவிஷயத்தில் அனைத்து விதிமுறைகள், நடைமுறைகள், முன்மாதிரிகள் ஆகியவற்றை நான் நன்கு ஆராய்ந்தேன். இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. நான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன். இதற்கு பாராட்டு தேவைஇல்லை. மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் என்னிடம் எதிர் பார்க்கப்பட்ட பணியை நான் சிறப்பாக செய்துள்ளேன் என்றார்.

இந்தவிவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘‘பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர வலுவான ஆதாரம்தேவை. வதந்திகள், காதால் கேட்கப்பட்டவை எல்லாம் ஆதாரங்களுக்கு மாற்றாக இருக்கமுடியாது. அடிப்படை ஆதாரமில்லாமல் இந்த பதவி நீக்கதீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்தபேட்டியில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் கொடுத்தது தவறு.இந்த நோட்டீஸ் கொடுக்கவேண்டாம் என சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் கூறினேன். பதவிநீக்க தீர்மானத்துக்கு நாங்கள் அதரவு தெரிவிக்கவில்லை. நீதித்துறையில் தலையிட எங்கள் கட்சி விரும்பவில்லை’’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...