149 தொகுதிகளில் டெபாசிட் இழந்த குமாரசாமி மோடியை பற்றி பேசலாமா?

கர்நாடக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மடாதிபதிகளை பற்றி முதல்மந்திரி குமாரசாமி தவறாக பேசுகிறார். முடிந்தால் அரசியலுக்கு வந்துபாருங்கள் என்று அவர்களுக்கு சவால்விடுக்கிறார். இதன் மூலம் மடாதி பதிகளையும், அவர்களை பின்பற்றும் பக்தர்களையும் குமாரசாமி புண்படுத்தி விட்டார். நான், குமாரசாமியை பார்த்து கேட்கிறேன், நீங்கள் எத்தனை தொகுதிகளில் வெற்றிபெற்று இருக்கிறீர்கள்?.

உங்கள் கட்சி 149 தொகுதிகளில் டெபாசிட் இழந்து விட்டது. இது பற்றி உங்களுக்கு தெரியுமா?. மக்கள் உங்களை நிராகரித்து விட்டனர். சித்தராமையா தயவால் நீங்கள் முதல்மந்திரி ஆகி இருக்கிறீர்கள். ஆனால் பதவி ஏற்புவிழாவில் சித்தராமையாவை, நீங்கள் (குமாரசாமி) அவமானப் படுத்தி விட்டீர்கள். இது அவர் சார்ந்துள்ள குருப சமூகமக்களை அவமானப் படுத்தியது போல் ஆகும். இது உங்களுக்கு நல்லதல்ல.

மோடியின் வெற்றியை தடுத்து விட்டதாக, நீங்கள் சொல்கிறீர்கள். வெறும் 37 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள உங்களுக்கு(குமாரசாமி), பிரதமர் மோடியை பற்றிபேச தகுதி இருக்கிறதா?. உங்களுக்கு அதிகாரதிமிர். அந்த அதிகாரம் தலைக்கு ஏறிவிட்டது. அதனால்தான் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் பற்றி பேசுகிறீர்கள்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...