அவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசையும்!

இந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது!

அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பத்திரிக்கை சுதந்திரம் பிணமாக்கப்பட்டது! அதே இரவு விடிவதற்குள் தேசிய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்!

ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், அடல் பிஹாரி வாஜ்பாய், எல். கே. அத்வானி, ராஜ் நாராயணன்,பிலுமோடி ஆகிய அன்றைய எதிர்கட்சி தலைவர்களை மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர், மோகன் தாரியா, கிருஷ்ணகாந்த், ராம்தன், பி.என். சிங் ஆகியோரும் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார்கள்!

தலைவர்கள் மட்டுமல்ல, ’மீண்டும் சுதந்திரம் வேண்டும்’ என போராட்டம் நடத்திய அனைவருமே சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள்!

கேரளாவில் மாணவர்களை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்திய சுகுமாரன் என்னும் மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டான்! அவன் உடலில் சக்கரையை கொட்டி எரித்ததாக பின்னாளில் செய்திகள் வந்தன!

இம்மாதிரியான கிட்லர் மொசவ்லினி செயல்பாடுகள் நாடு முழுமையும் நடந்தன! சுதந்திரக்குரல் எழுப்பிய பலர் சாகடிக்கப்பட்டார்கள்! பேச்சுரிமை எழுத்துரிமை போராட்ட உரிமைகள் என அனைத்தும் பறிக்கப்பட்டன! தேச பக்தர்கள் சிறையில் வாட வேண்டும் அல்லது ஒழிந்து வாழவேண்டும் என்னும் நிலை ஏற்பட்டது! நமது மூத்த தலைவர் இல.கணேசன் உட்பட பல தமிழக தலைவர்களும் ஒழிந்து வாழ்ந்து ஜனநாயகத்தை தட்டி எழுப்பும் பணிகளில் ஈடுபட்டனர்!

இந்த அவசரநிலை சர்வாதிகார கொடுமைகளுக்கு காரணம் நேரு குடும்பத்தின் சர்வாதிகார வெறியே! முதல் பிரதமர் என நேரு அறிவிக்கப்பட்டதே ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கைதான்! நேருவைக்காட்டிலும் முன்னணியில் பல தலைவர்கள் அப்போதைய காங்கிரசில் இருந்தார்கள்!

நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் மரணத்தை தொடர்ந்து நேருவின் மகள் இந்திரா பிரதமர் ஆனார்!

இங்கே தமிழகத்தில் ஜெயலலிதாவுக்குப்பின் அவரின் பணிப்பெண்ணாக நிகழ்ச்சிகளுக்கெல்லாம் உடன் சென்றுவந்த சசிகலாதான் அடுத்த முதல்வராக வேண்டும் என ஒரு முயற்சி நடந்து தோல்வி ஆனது, ஆனால் அன்று டெல்லியில் நேருவுக்குப்பின் அவரோடு வெளிநாடுகளுக்கெல்லாம் சென்றுவந்த அவரின் மகள்தான் பிரதமராக வேண்டும் என்னும் முயற்சி வெற்றிபெற்றது! சசிகலா இந்திரா இரண்டுமே அணுகுமுறை ஒன்றுதான்!

இந்திராவிடம் அரசியல் பக்குவமும் எதுவும் இல்லை! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சிறுபிள்ளைத் தனமாக சில செயல்களை செய்தார்! அவற்றில் பல விமர்சிக்கப்பட்டு எதிர்க்கப்பட்டன, சில பாராட்டப்பட்டன!

பிரதமரின் உதவியாளராக அரசால் நியமனம் செய்யப்பட்ட அரசு செயலாளரான யஸ்பால்கபுர் என்னும் அதிகாரியை தேர்தல் நேரத்தில் கட்சியின் செயலாளராக மாற்றினார் இந்திரா! அவர் மூலமாக அனைத்து அரசு துறைகளையும் தேர்தலில் இந்திராவின் வெற்றிக்கு; அதாவது காங்கிரசின் வெற்றிக்கு வேலை செய்யுமாறு பணித்தார்!

இது குற்றம் என்பது சாதாரண அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரியும்! ஆனால் இந்திராவின் ஆணவம் அவர் கண்களை மறைத்தது!

இந்திராவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஜெயப்பிரகாஸ் நாறாயணன் என்னும் சுதந்திர போராட்டவீர்ர் வழக்குத்தொடுத்ததால் நீதிமன்றம், இந்திரா 1971ல் ரேபரேலி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தது செல்லாது என அறிவித்தது!

இந்த தீர்ப்பு 1975 ஜூன் 12 ல் சொல்லப்பட்டது! இந்த தீர்ப்பை சொன்ன அலகாபாத் நீதிபதி ஜெகன்மோகன் சின்ஹா அவர்களை ஆண்மையுள்ள நீதிபதியென்று அன்றைய பத்திரிக்கைகளும் நடுநிலையாளர்களும் பாராட்டினர்!

உச்சநீதிமன்றம் சென்ற பிரதமர் இந்திராவால் இந்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவை வாங்கமுடிந்தது! உச்சநீதிமன்றம் இந்திரா பிரதமராக தொடரலாம், முக்கியமான முடிவுகளில் மட்டும் வாக்களிக்கக்கூடாது என்றது!

நீதிமன்ற நடவடிக்கைகளை தொடரும் வாய்ப்பு இருந்தும், பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உடனடியாக இல்லாமல் இருந்தும், தனது மொசெளலினி ஆசையை நிறைவேற்ற திட்டமிட்டார் இந்திரா!

இந்திராவுக்கு நாட்டுப்பற்று சற்றும் இல்லை என்பதை, பிரதமரின் மகளாக பிறந்திருந்தும் தந்தையின் மரணத்தை தொடர்ந்து அவர் அமேரிக்காவுக்கு குடி பெயர திட்டமிட்டார் என்னும் செய்தி நமக்கு உணர்த்துகிறது! அவர் தோழிக்கு எழுதிய கடிதத்தில் அமேரிக்க திட்டத்தை வெளியிட்டிருந்தார்!

இந்திரா கொண்டுவந்த நெருக்கடி நிலை அவருக்கு ஏற்பட்ட நெருக்கடியால் கொண்டுவரப்பட்டது என பொதுவாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை! இந்திராவின் சர்வாதிகார குடும்ப ஆட்சி ஆசையை அந்த சந்தர்ப்பத்தில் இந்திரா பயன்படுத்திக்கொண்டார் என்பதுதான் உண்மை!

இந்திராவின் அந்த குடும்ப சர்வாதிகார கொள்கை இன்றுவரை அந்த குடும்பத்தில் தொடரத்தான் செய்கிறது!

எனவேதான் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என்கிறார்! ஒரு குடும்பத்தின் ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் என்பது மோடியின் திட்டமாகும்!

சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்து சர்வாதிகாரியாக விழங்கிய இந்திராவை காங்கிரஸ் காரர்கள் இந்தியாதான் இந்திரா! இந்திராதான் இந்தியா என்று புகழ்ந்து தள்ளினர்!

அவசர கால வேளையில் காங்கிரஸ் கட்சியின் அன்றைய அதிகாரபூர்வ பத்திரிக்கையான நேஷனல் ஹெரால்டு’ என்னும் ஆங்கில நாளிதழில் ஒரு தலையங்கம் வெளிவந்தது. தான்சானியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஒரு கட்சி ஆட்சிமுறையைப் புகழ்ந்து அந்தத் தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்தது. பல கட்சி ஜனநாயகத்தை விட ஒரு கட்சி ஆட்சிமுறை வீரியம் குறைந்தது அல்ல என்று தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த காங்கிரஸ் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு கட்சிஆட்சிமுறை என்பதன் உட்பொருள் ”ஒரு குடும்ப ஆட்சி முறை” என்பதாகும்!

இன்றைக்கும் காங்கிரஸ் கட்சியின் கருத்து அதுவாகத்தான் இருக்கிறது!

25 – 6 – 1975 நல்லிரவில் துவக்கப்பட்ட காங்கிரசின் கொடுங்கோல் ஆட்சி 24–3-1977 ல் மொரார்ஜிதேசாய் தலைமையிலான ஜனதா அட்சி பொறுப்பேற்றதோடு முடிவுக்கு வந்தது! பத்தொன்பது மாதங்களாக மக்களை கசக்கிப்பிழிந்து அடக்கி ஆண்டு இந்திராதான் இந்தியா என உரக்கச்சொல்லி பிரச்சாரம் செய்து! எதிர்த்தவர்களை வன்கொடுமை சிறைச்சாலையில் சித்திரவதை செய்து! மக்களை மிரட்டி, பணியவைத்து குடும்ப ஆட்சியை வேரூன்றிவிடலாம் என்னும் ஆசையில் 1977 பிப்ரவரி மாதம் தேர்தலை அறிவித்தார்கள்!

இந்திராவின் நேரு குடும்ப ஆட்சி வேரூன்றும் என நினைத்தார்கள்! இந்திய மக்கள் சுதந்திர உணர்வற்ற அடிமைகள்தான் என்று நேரு குடும்பமும் காங்கிரஸ் காரர்களும் நம்பினார்கள்!

ஆனால் மக்கள் சர்வாதிகாரிக்கு பாடம் கர்ப்பித்துவிட்டார்கள்! இந்திராவை தோக்கடித்தார்கள்!

இரண்டாவது சுதந்திரத்தை நாடு அடைந்தது! அவசரக்கால வன்கொடுமையிலிருந்து நாடு விடுதலையானது!

அவசரநிலை காலத்து சர்வாதிகாரம் இன்றைக்கும் காங்கிரச் கட்சியில் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது! இந்த ஜனநாயகத்திற்கு எதிரான கொடிய கட்சியை மண்ணோடு மண்ணாக்கி மாய்க்கவேண்டியது தேசப்பக்தர்களான பாஜகவினரின் கடமையாகும்!

நன்றி – குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...