மல்லையாவை இயக்குவது யாரோ?

இந்தச் சர்ச்சைகளே 2019 லோக் சபா தேர்தலுக்கு தயார் படுத்திக் கொள்வதற்கான ஒருபகுதியே. மல்லையா ஒரு பொய்யர், அவர் கூறிய ஒருவார்த்தை அருண் ஜேட்லியை பிரச்சினைக் குள்ளாக்கியது. லண்டன் செல்லும் முன் அருண் ஜேட்லியைச் சந்தித்து செட்டில் செய்வதாக கூறியதாக தெரிவித்தார்.

மல்லையா போன்ற ஒருபொய்யரின் கூற்றை வைத்துக்கொண்டு எந்த அடிப்படையில் அருண் ஜேட்லியை சந்தேகிக்க முடியும். காங்கிரஸ்தான் அதை செய்தது. சில ஆயிரம்கோடி ரூபாய்கள் வங்கிக்கடனை மோசடி செய்து விட்டு லண்டனில் நாடுகடுத்தும் வழக்கை சந்தித்துவருகிறார்.

வாராக்கடன்களில் சிக்கிய வங்கிகளின் எண்ணிக்கை 16. இந்த வங்கிகளிலிருந்து கடன்பெற்றவர்கள் அனைவரும் பண முதலைகள். இதில் மல்லையாவும் ஒருவர்.

அவர் கடனைத் திருப்பித்தருகிறேன் என்று கூறியதை வங்கிகள் ஏற்கவில்லை, இதனையடுத்து அருண் ஜேட்லியை மாநிலங்களவைக்கு வெளியே சந்தித்துள்ளார், ஒரு எம்.பியாக அங்குசுற்ற அவருக்கு உரிமை உள்ளது. இதை வைத்துக்கொண்டு அருண் ஜேட்லியையும் குற்றவாளி என்று காங்கிரசின் பூனியா கூறுவது முழுதும் முட்டாள்தனமானது.

கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏமாற்றியது மல்லையா மட்டுமல்ல, இன்று பல எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூடத் தான் நிரவ் மோடி தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தற்போது செய்திகள் வெளியாகின்றன. எனவே ராகுல் காந்திதான் நிரவ் மோடி தப்பிக்கக் காரணம் என்று கூற முடியுமா?

இவ்வளவு ஆண்டுகள் கழித்து மல்லையா இதனை தெரிவிக்கிறார், ஜேட்லி-மல்லையா சந்திப்பு முன்னரே தெரியுமென்றால் காங்கிரஸ் ஏன் இத்தனை நாட்களாக வாயை மூடி கொண்டிருந்தது?

அல்லது மல்லையாவின் பின்னால் யாரோ அவரை இயக்கி இத்தகையகூற்றுகள் அவரிடமிருந்து வருகிறதா? இவையெல்லாமே 2019 தேர்தலுக்கான தயாரிப்புகளே. விரும்ப தகாதவர்களை நீக்கி விடுவதற்கான முயற்சி, இப்போது ஜேட்லிக்கு இதுநடந்துள்ளது.

போபர்ஸ் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட குவாட்ரோக்கி காங்கிரஸ், சிபிஐ உதவியில்லாமல் தப்பியிருக்க முடியுமா?

நன்றி சாம்னா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...