எந்த மதத்துக்கு எதிரான கருத்தையும் பாஜக ஏற்காது.

முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் விவகாரத்தில் பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் நூபுர் சர்மா கட்சியில்இருந்து தற்காலிகமாக நீக்கப்பட் டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் அண்மையில்விவாதம் நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா பங்கேற்றார். அப்போது அவர், முகமது நபி குறித்து அவதூறாகபேசியதாக முஸ்லிம்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நூபுர் சர்மாவை கண்டித்து உத்தரபிரதேசத்தின் கான்பூரில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கடந்த 3-ம் தேதி கடையடைப்பு நடத்தப்பட்டது. அப்போது இருதரப்புக்கு இடையே கலவரம் வெடித்து பலர்படுகாயம் அடைந்தனர்.

இந்த சூழலில் பாஜக மத்தியஒழுங்கு நடவடிக்கை குழு, நூபுர் சர்மாவுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், “பாஜகவின் நிலைப்பாட்டுக்கு எதிராக நீங்கள் கருத்துதெரிவித்திருப்பதால் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளோம். கட்சியில் நீங்கள் வகித்தபொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நூபுர் சர்மா கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதே விவகாரம் தொடர்பாக டெல்லி பாஜக ஊடகபிரிவு பொறுப்பாளர் நவீன் ஜிண்டாலும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

நூபுர் சர்மா விவகாரம் குறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது: இந்தியாவின் பல்லாண்டு கால வரலாற்றில் ஒவ்வொரு மதமும் செழித் தோங்கி வளர்ந் திருக்கிறது. அனைத்து மதங்களையும் பாஜக மதிக்கிறது. எந்தவொரு மதத்தலைவரும் அவமதிக்கப் படுவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது.

மதத்தின் கொள்கைகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்கப் படுவதை பாஜக ஒருபோதும் ஏற்காது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை ஊக்குவிக்க மாட்டோம். நாட்டின் ஒவ்வொருகுடிமகனும் அவரவருக்கு விருப்பமான மதங்களை பின்பற்ற இந்திய அரசமைப்பு சாசனம் உரிமை வழங்கியுள்ளது.

இப்போது நாட்டின் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடி வருகிறோம். அனைவரும் சமமாக,கண்ணியத்துடன் வாழும்வகையில் மிகச் சிறந்த இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதி மேற்கொண்டுள்ளோம். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காப்பாற்றி வளர்ச்சியின் பலன்களை அனைத்து தரப்பு மக்களும்பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டின் முன்னேற் றமே முக்கியம். இவ்வாறு அருண் சிங் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...