மைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிடறதா?

திருக்குவளை முன்னேற்ற கழக ஸ்டாலின் அவர்களே -ஏதோ, அண்ணா உருவாக்கிய மடத்தை உங்க அப்பா ஆட்டையப் போட்டு
50 வருஷம் தலைவரா இருந்தாரு –

அவர் கோமால இருக்கும் போது கூட அந்தப் பதவிய உங்களுக்குத் தரலை -ஆள் போனதுக்கு அப்புறம் நோகாம வந்து பதவில உட்காந்திருக்கற நீங்க எங்க ?-

1980-ல ஆரம்பிச்ச பா.ஜ.க.வில் _ஆரம்பிச்சதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் 38 வருஷத்துல மொத்தம் 10 தலைவர்கள் பாத்தாச்சு –

70 வருஷமா இருக்கற கட்சில இப்பத்தான் இரண்டாவது தலைவரா வந்து இருக்கீங்க –

எது ஜனநாயகக் கட்சி? –

சரி இருக்கட்டும் –

தி.மு.க ஆரம்பிச்சு 30 வருஷம் பிறகு உருவான கட்சி பா.ஜ.க-

இன்னைக்கு அந்தக் கட்சியோட அடிமட்ட தொண்டன் பிரதமரா இருக்காரு,அடி மட்டத் தொண்டன் ஜனாதிபதியா இருக்காரு,

துணை ஜனாதிபதியா இருக்காரு !!

அந்தக் கட்சி இந்தியாவ மட்டுமல்ல,

12 மாநிலத்துல தனியா ஆட்சில இருக்கு,

4 மாநிலத்துல கூட்டணி ஆட்சி நடக்குது !!

அது மட்டுமல்ல உலகத்துலயே பெரிய கட்சியா கின்னஸ்ல பதிவாகியிருக்கு.

கிட்டத்தட்ட 345 MP க்கள் உள்ள கட்சி – (272 + 73)

1500 MLA க்கள் உள்ள கட்சி –

அப்படிப்பட்ட கட்சிய ஒரே ஒரு லோக்சபா உறுப்பினர் கூட இல்லாத உங்கள் கட்சி அழித்து விடுமா? –

சரி கட்சிய விட்டுடுவோம் –

14 வருஷம் முதல்வர், நாலு வருஷம் பிரதமரா இருந்த மோடியோட சொத்து என்ன தெரியுமா? –

உங்க மகனோட ஹம்மர் காரோட விலைல கால்வாசி கூடக் கிடையாது-

அவரோட குடும்பம் எப்படி இருக்குன்னு நாட்டுக்கே தெரியும் –

ஆனா, மைனாரிட்டியா தமிழ்நாட்ட ஆண்ட உங்க குடும்பம் இன்னைக்கு எப்படி இருக்கு?-

முரசொலி மாறன் –
தயாநிதி –
அழகிரி –
கனிமொழி – ன்னு எல்லாருக்கும் பதவிகள பங்கு போட்டுக் கொடுத்த குடும்பக் கட்சி உங்களோடது –

அது மட்டுமா?-
உதயநிதி ஸ்டாலின்
தயாநிதி அழகிரி
கயல்விழி – ன்னு
அடுத்தடுத்து நண்டு சிண்டெல்லாம் பதவிக்கு வரிசையா நிக்குது –

அஞ்சுவாட்டி முதலமைச்சர் ஆயிட்டு 500 தலைமுறை உட்காந்து சாப்படற அளவுக்கு சொத்து சேத்தாச்சு –

டிவி சேனல் மட்டும் 45 இருக்கு –

போதாததுக்கு Sun Direct, SCV-ன்னு ஒவ்வொரு குடிமகனும் மாசா மாசம் உங்க குடும்பத்துக்கு கப்பம் கட்டியே ஆகணும்ங்கற அளவுக்கு கொண்டு வந்தாச்சு –

அசையா சொத்துக்கள் கணக்கேயில்ல –

அசையும் சொத்துக்கள்னா –
லம்போகினில இருந்து ஹம்மர் வரைக்கும் உங்க கிட்ட இல்லாத காரே இல்ல –

இப்படி கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம மக்கள் பணத்த திருடி சொகுசு வாழ்க்கை வாழற நீங்க –

மோடிய எதுக்கப் போறீங்களா?

அவர் பேரச் சொல்ற தகுதி கூட உங்களுக்குக் கிடையாது –

மைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிடறதா?-

இன்னைக்கி ஒரு தெருமுனைக் கூட்டம் போட்டா கூட –
காசு குடுத்து கூட்டத்த கூட்டற கேவலமான நெலமைல தி.மு.க இருக்கு –

ஆனா, மோடிக்காக உயிரைக் கூட குடுக்க கோடிக்கணக்கான இளைஞர்கள் இங்க இருக்காங்க –

அது தான் அவரோட சொத்து –

2019 மட்டுமல்ல 2024-லயும் கூட அவர் தான் பிரதமர் –

இந்தியா மட்டும் அல்ல –
கூடிய விரைவில் தமிழ்நாட்டுக்கும்
காவி பெயிண்ட் அடிச்சே தீருவோம் –

ஏன்னா, நாங்க நேர்மையா வளர்ந்துகிட்டு இருக்கோம் –

நீங்க வேகமா அழிஞ்சிகிட்டு இருக்கீங்க..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...