பா.ஜ.க மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தூத்துக்குடி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகாவில் குமாரசாமியின் காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருக்கிறது. மக்களின் தீர்ப்பு நிறைவேற்றபட்டு இருக்கிறது. மக்கள் பா.ஜ.க.,வுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். ஆனால் மிககுறைந்த இடங்களை பெற்ற குமாரசாமி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.
தற்போது மக்கள் எந்த ஆட்சி அமையவேண்டும் என்று நினைக்கிறார்களோ அது நடந்து இருக்கிறது. கர்நாடகாவில் தாமரை மலரும் போது தென் தமிழகத்தில் உள்ள மற்ற மாநிலங்களிலும் பா.ஜ.க வலுப்பெறும்.
தமிழை நாங்கள்தான் காப்பாற்றி வருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்லிவருகிறார். இது தமிழ்தாய்க்கு பொறுக்காது. தமிழை யாரும் காப்பாற்றவேண்டிய அவசியம் இல்லை. தமிழ் ஒரு முதுமொழி. என்றும் இளமையான மொழி.
இந்தியை மத்திய அரசு திணிக்கவேண்டிய அவசியம் இல்லை. தபால்துறை, ரெயில்வே துறையிலும் இந்தியை திணிக்க வேண்டிய எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. தமிழின் பெருமையை போற்றுவதில் பா.ஜனதா முதன்மையான கட்சியாக இருக்கும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ஸ்டாலின்பெருமை டெல்லிக்கு தெரிகிறது. தமிழ்நாட்டுக்கு தெரியவில்லை என்று கூறிஇருக்கிறார். அவருடைய பெருமை ஜப்பான் மற்றும் சர்வதேசளவில் தெரிந்தால் சந்தோஷம்தான். ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கு தி.மு.க. தான் காரணம்.
தமிழ்நாட்டில் பலமுறை ஆட்சியில் இருந்த திமுக. தண்ணீரை சேமிப்பதற்கான எந்த ஒரு தொலை நோக்கு பார்வையிலும் திட்டத்தை செய்ய வில்லை.
தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற கொலை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தி.மு.க.வை சேர்ந்தவர்களின் 2-வது கொலை இது. மாணவர்கள், பொது மக்கள் பயணிக்கும் பேருந்தில் கத்தியுடன் சண்டைபோட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதை காவல்துறை தடுக்கவேண்டும் என்றார்
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |