முத்தலாக் தடைசட்ட மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறியது

முத்தலாக் தடைசட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவுஅளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்மூலம் முத்தலாக் தடை சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

இஸ்லாமிய ஆண்கள் தலாக் என்று மூன்று முறை கூறி விவகாரத்து செய்யும் முறையை தடுக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக முயன்று வந்தது.தற்போது மக்களைவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்ற மோடி தலைமையிலான ஐந்தாண்டு ஆட்சியிலேயே லோக் சபாவில் இந்த முத்தலாக் தடைசட்ட மசோதாவை பாஜக வெற்றிகரமாக நிறைவேற்றியது. ஆனால் அப்போது பாஜகவிற்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.

இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவுஇல்லை என்பதால் தொடர்ந்து அவசரசட்டம் இயற்றி இதை அரசு பயன்படுத்தி வந்தது. தேர்தல் நடந்துமுடிந்து லோக்சபாவில் மீண்டும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாஜக தாக்கல் செய்தது. இது லோக்சபாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இன்று ராஜ்யசபாவில் இந்தமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில்தான் இதன்மீதான வாக்கெடுப்பு தற்போது நடந்தது.மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே அதிமுக எம்பிக்கள் வெளியேறினர்.
மசோதாவிற்கு திமுக, காங்கிரஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஎஸ்பி, தெலுங்கு தேசம்கட்சி மாநிலங்களவையில் வாக்கெடுப்பை புறக்கணித்தது. அதன்பின் வாக்குசீட்டு முறை மூலம் வாக்கெடுப்பு நடந்தது.
முக்கிய எதிர்க்கட்சிகள் சில வெளிநடப்பு செய்துள்ளதால் மசோதாநிறைவேற சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்மூலம் முத்தலாக் தடைசட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

இந்த மசோதாவிற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, அதிமுக ஆகியவை எதிர்ப்புதெரிவித்தது. அதேபோல் பாஜக மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக தவிர மற்றகட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்தது. ஆதரவாக 99 வாக்குகள், எதிராக 84 வாக்குகள், வெளிநடப்பபு 30 பேர் என்பதால் மசோதா நிறைவேறியது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...