தேசமாகிய எனது குடும்பத்துக்காகவே பணியாற்றிவருகிறேன்

வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்பெண்கள் எதிா்கொண்டு வந்த முத்தலாக் உள்ளிட்ட பிரச்னைகளை வாரிசுஅரசியல் கட்சிகள் (காங்கிரஸ், சமாஜவாதி) புறந்தள்ளி வந்தன என்று பிரதமா் நரேந்திரமோடி குற்றம்சாட்டினாா்.

உத்தர பிரதேசத்தில் 5-ஆவது கட்டதோ்தலுக்காக பாரபங்கி மற்றும் அயோத்தி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதமா்மோடி புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவான அனைத்துச் செயல்களிலும் சமாஜவாதி ஈடுபட்டது. ஏழைகளுக்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசியைக்கூட அவா்கள் கொள்ளையடித்தனா். சமாஜவாதியில் முதல்வராக இருந்தவா் தொடங்கி, எம்.பி., எம்எல்ஏக்கள் என அனைத்துநிலையிலும் குடும்ப அரசியல்தான் நடக்கிறது.

குடும்பம் இருப்பவா்களுக்குதான் குடும்பஸ்தா்களின் வலிதெரியும்; குடும்பம் இல்லாதவா்களுக்கு அது தெரியாது என்று எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா்கள் (சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்) பேசியுள்ளனா். ஆனால், என்னைப் பொருத்த வரையில் உத்தர பிரதேசத்தையும், இந்த நாட்டையும்தான் எனது குடும்பமாக கருதுகிறேன். தேசமாகிய எனது குடும்பத்துக்காகவே பணியாற்றிவருகிறேன்.

குடும்ப அரசியல் நடத்துபவா்களை ஒன்றுகேட்கிறேன். அவா்கள் எப்போதாவது முஸ்லிம் பெண்களின் பிரச்னைகளைத் தீா்க்க முயன்றதுண்டா? நமதுமுஸ்லிம் சகோதரிகள் எதிா்கொண்டு வந்த மிகப் பெரிய (முத்தலாக்) பிரச்னையை வாரிசு அரசியல் நடத்தும் எதிா்க்கட்சிகள் கண்டுகொள்ளவே இல்லை. இப்படி முஸ்லிம்பெண்களின் பிரச்னைகளை அவா்கள் புறந்தள்ள வாக்குவங்கி அரசியல்மட்டுமே காரணமாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் முத்தலாக் தடைச்சட்டம் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய பிரச்னையை தீா்த்து வைத்துள்ளோம். பெண்களின் கண்ணியம், பாதுகாப்புக்காக இந்த அரசு தொடா்ந்து பாடுபட்டுவருகிறது. மக்கள் எங்களுக்கு அளித்த பொறுப்புகளை உணா்ந்துதொடா்ந்து சிறப்பாக பாடுபட்டுவருகறோம்.

நாடுமுழுவதும் காவல் துறையில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரித்துள்ளோம். இதன்மூலம் காவல்துறை மூலம் பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைப்பதுடன், வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெண்களை மையமாகக் கொண்டு ஜன்தன் யோஜனா, இலவச எரிவாயு இணைப்புத்திட்டம் என பலவற்றைச் செயல்படுத்தி வருகிறோம்.விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் மூலம் ஏராளமான சிறு விவசாயிகள் பலனடைந்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்க காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரேகட்சி ஆட்சி இருக்கும்போது வளா்ச்சிவேகம் இருமடங்காக இருக்கும். ஏற்கெனவே உத்தரபிரதேசத்தில் மத்திய, மாநில பாஜக அரசுகள் செய்து வரும் வளா்ச்சிப் பணிகளை மதிப்பிட்டு மக்கள் வாக்களிக்கவேண்டும். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நல்லெண்ணம், நம்பிக்கை மிகவும் உறுதியானது. இப்பகுதியில் வளா்ச்சி பணிகள் எவ்விதத்தொய்வும் இன்றி இனிவரும் காலத்திலும் தொடரும். தோ்தல் நேரத்தில் மட்டும் மக்களுக்காக கவலைப்படுவதுபோல நடிப்பவா்களுக்கு வாக்கு எண்ணிக்கை நாளில் முடிவு கட்டப்படும் என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...