பிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா

பிரதமர் மோடி பற்றி, சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்துள்ள ’மன் பைராகி’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படுகிறது. இதை பிரபல ஹீரோ பிரபாஸ் வெளியிடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை கதை, ’பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் சினிமாவாக உருவானது. மேரிகோம், சர்ப்ஜித் ஆகியோரின் பயோபிக் படங்களை இயக்கிய ஓமங்க் குமார் இயக்கி இருந்தார். விவேக் ஓபராய், நரேந்திர மோடியாக நடித்திருந்தார். இந்தப்படம் மே 24 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிய பற்றி மற்றொருபடம் உருவாகிறது. ’மன் பைராகி’ (Mann bairagi- உலகின் மீது பற்றற்ற மனசு?) என்று தலைப்பு வைக்கப் பட்டுள்ள, இந்தப் படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். சஞ்சய் திரிபாதி எழுதி இயக்குகிறார். பிரதமர் மோடியின் இளமைகால வாழ்க்கையின் சொல்லப்படாத கதையாக இந்தப்படம் இருக்கும் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.

‘இந்தக்கதை எல்லோருக்கும் பொருந்தக் கூடிய மெசேஜை கொண்டுள்ளது. பிரதமர் மோடியின் இளம்வயது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்ட விஷயங்களில் இருந்து பல்வேறு சம்பவங்களை சரியாக ஆய்வு செய்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்கதை கண்டிப்பாக சொல்லப்பட வேண்டும் என்று நினைத்ததால் உருவாக்கி இருக்கிறேன்’’ என்று சஞ்சய் லீலா பன்சாலி தெரிவித்துள்ளார்.

’நம் நாட்டின் உயர்ந்த, வலிமையான தலைவராக இருக்கிற ஒருவரின் சொல்லப் படாத, உணர்வு பூர்வமான கதை இது’ என்கிறார் இயக்குனர் சஞ்சய் திரிபாதி. இந்தப்படம் ஒருமணி நேரத்துக்கும் அதிகமாக உருவாக்கப் பட்டுள்ளது.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பிரதமர் மோடியின் 69 வது பிறந்த நாளான இன்று வெளியிடப்படுகிறது. பிரபல ஹீரோ பிரபாஸ் வெளியிடுகிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...