பெங்களூர் மேயர் பதவியை பாஜக கைப்பற்றியது

பெங்களூரு மேயராக பதவிவகித்துவந்த காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த கங்காம்பிகேவின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதியமேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

கவுன்சிலர்கள் மட்டுமல்லாது, பெங்களூரு எல்லைக் குட்பட்ட எம்எல்ஏ.க்கள், எம்.எல்.சிக்கள் மற்றும் எம்.பி.க்கள் என மொத்தம் 257 பேருக்கு இத்தேர்தலில் வாக்களிக்க உரிமைஉண்டு என்ற நிலையில், 129 வாக்குகளைப் பெறும் வாக்காளர் மேயராக தேர்வு செய்யப் படுவார் என்ற சூழல் இருந்தது.

அந்தவகையில் விறுவிறுப்பாக நடந்ததேர்தலில் பாஜகவைச் சேர்ந்த கவுதம் குமார் 129 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இதன்மூலம் பெங்களூரு மேயராக அவர் தேர்வு செய்யப் பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சத்யநாராயணாவை விட 17 வாக்குகள் அதிகம்பெற்று இந்த வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசின் ஆட்சி கவிழ்ந்து மாநில ஆட்சியை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில், இந்த மேயர்தேர்தல் வெற்றியானது முக்கியமானதாக கருதப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...