பாஜக மற்றும் சிவசேனா இடையே தொகுதிபங்கீட்டில் உடன்பாடு

மராட்டிய மாநில தேர்தலில் பாஜக  மற்றும் சிவசேனா இடையே தொகுதிபங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, முதல்வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கடந்த சில தினங்களாக நீடித்துவந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு 21ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்று 24ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த சிலநாட்களாக தொகுதிப் பங்கீடு செய்வதில், பாஜக–சிவசேனா இடையே இழுபறி நீடித்து வந்தது. தற்போது, இழுபறி முடிவுக்கு வந்ததை அடுத்து, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜகவுக்கு 125 தொகுதிகளும், சிவசேனாவுக்கு 124 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எஞ்சியதொகுதிகள் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 125 தொகுதிகளுக்கான வேட்பாளர்பட்டியல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ், நாக்பூர் தென்மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மராட்டிய மாநில பாஜக தலைவர் சந்திர காந்த் பாட்டீல், கொத்ரட் தொகுதியில் போட்டியிடுகிறார். உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள 124 தொகுதிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, மும்பை வோர்லிதொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலில், லோக்மண்ய திலக் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜின் குடும்ப உறுப்பினர்களையும் பரிந்துரைத் துள்ளது.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான குடியரசுகட்சி, ராஷ்டிரிய சமாஜ் பக்ஷ், சிவ சங்க்ரம் சங்கத்னா மற்றும் ராயத் கிரந்தி சேனா ஆகிய கட்சிகளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும் சிவசானாவும் தனித்தனியாக போட்டியிட்டன. இதில் பாஜக 122 இடங்களையும் சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...