வரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தயார்

பிரான்ஸ் சென்றுள்ள ராஜ்நாத்சிங்,  அந்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் அதிபர்களை  சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் அமைத்து ராணுவ தளவாடங்களை தயாரிக்கு மாறும், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.இதேபோல் பிரான்ஸ் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இந்தியாவில் எளிதாக தொழில்செய்யும் வண்ணம் சிறப்பான வணிக சூழலை உருவாக்குமாறு பிரான்ஸ் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்கும் வகையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு தளங்களை இந்தியாவில் நிறுவ ஆர்வமாக உள்ளதாகவும், எனவே வரி விதிப்பு போன்ற வணிகத் தடைகள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்  என்றும் சஃப்ரான் ஏர்கிராஃப்ட் சார்பில் கோரிக்கை விடுக்கபட்டது.

இதைக் கேட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், மோடி தலைமையிலான அரசு, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்தசூழலை உருவாக்குவதற்காக சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி முனையங்கள் உருவாக்க பட்டுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது: பிரான்ஸ் ராணுவ அமைச்சருடன் நடத்தியபேச்சு, பயனுள்ள வகையில் இருந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, மேலும் பலமாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான ராணுவ ரீதியிலான அனைத்து விஷயங்களையும், மறு ஆய்வு செய்யவும், ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தவும், இந்த சந்திப்பு உதவும். ரபேல் போர் விமானங்களில், முதல் கட்டமாக, 18 விமானங்கள், வரும், 2021 பிப்ரவரிக்குள், இந்தியா வந்து விடும். மீதமுள்ள விமானங்கள், 2022 மே மாதத்துக்குள் வந்துவிடும். இவ்வாறு, அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...