நக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு  நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன.

முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் என 13 தொகுதிகளில் நவம்பர் 30-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் தொகுதிகளில் தேர்தல்பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் பழங் குடியின மக்கள் அதிகம்வசிக்கும் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்செய்து வருகிறார்.

இன்றைய பிரசார கூட்டத்தில் பேசிய மோடி கூறியதாவது:-

ராமர் இளவரசராக அயோத்தியை விட்டு 14 ஆண்டுகள் வன வாசம் சென்றார். காடுகளில் ஆதிவாசி மக்களுடன் வாழ்ந்து பழகிய பின்னர் ‘மரியாதை புருஷோத்தமன்’ ஆக மீண்டும் அயோத்திக்குவந்து நாடாண்டார்.

ஜார்ஜண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி இங்கு ஆட்சிசெய்த போது முதல் மந்திரி நாற்காலி விலைக்கு விற்கப்பட்டது. அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஊழலும் கொள்ளையும்தான் முக்கிய செய்திகளாக வந்தனர். பல தலைவர்கள் இன்னும் ஊழல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.

ஜார்ஜண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ்  கூட்டணி அரசியல் வஞ்சகம் மற்றும் துரோகத்தின் அடிப்படை யிலானது. பாஜகவின் அரசியல் மக்கள் சேவையை அடிப்படையாக கொண்டது. எங்கள் ஆட்சிக்காலத்தில் நக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட வாக்குப் பதிவு முடிந்தவுடன் பதிவான வாக்கு சதவீதத்தை வைத்து பார்க்கும் போது பாஜக மீதும் தாமரை சின்னத்தின் மீதும் மக்களவைத்துள்ள நம்பிக்கை மிகதெளிவாக தெரிகிறது. இந்த மாநிலத்தின் முன்னேற்றத்தை பாஜக ஆட்சியால்மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என ஜார்க்கண்ட் மக்கள் நம்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...