வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பம்சம்

அனுமதிபெறாத 1,797 குடியிருப்பு பகுதிகளை முறைப்படுத்தி பட்டாவழங்கும் விழாவில் பேசிய பிரதமர் மோடி வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பம்சம் என குறிப்பிட்டார்.

நாட்டின் தலைநகரான டெல்லிக்குட்பட்ட பலபகுதிகளில் சுமார் 175 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அனுமதி இல்லாத  குடியிருப்பு பகுதிகளில் ஏழை, எளியமக்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.

எவ்வித அனுமதியும் இல்லாமல் இப்படி கட்டப் பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளை இடிக்கும் நடவடிக்கைகளை டெல்லி அரசு அவ்வப் போது எடுத்துவந்தது. இதற்கு எதிராக மக்கள் வழக்கு தொடர்வதும், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவிப்பதும் தொடர் கதையாக இருந்தது.

இப்படிப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எல்லாம் முறைப்படுத்தி அங்கீகாரம் அளிக்க மத்தியஅரசு மற்றும் டெல்லி அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலுத்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி இல்லாத 1,797 குடியிருப்பு பகுதிகளுக்கு அங்கீகாரம் அளிக்க மத்திய மந்திரி சபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

நவம்பர் மாதம் தொடங்கிய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.

மேற்கண்ட 1,797 குடியிருப்பு பகுதிகளும் குறைந்த வருமானத்தினர் வாழும் பகுதியில் அமைந்துள்ளன. வசதிபடைத்தவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகள் இந்த வரையறைக்குள் வராது.

இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 40 லட்சம் வீட்டு உரிமையாளர்கள் பயனடைவார்கள் என்ற நிலையில், டெல்லி ராம் லீலா மைதானத்தில் அனுமதி பெறாத குடியிருப்புகளை முறைப்படுத்தி பட்டா வழங்கும் விழாவில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ’வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பம்சம்’ என குறிப்பிட்டார்.

நீங்கள் யாரை நம்பி வாக்களித்தீர்களோ அவர்கள் உங்களுக்கு ஏதும் செய்ய வில்லை. மாறாக, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சுமார் 2 ஆயிரம் ஆடம்பர பங்களாக்களை அளித்தனர். என்ன கைமாறு கருதி அவர்களுக்கு பங்களாக்கள் அளிக்கப்பட்டன என்பது யாருக்கும்தெரியாது.

நாடு சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆகியும் டெல்லியில் வாழும் பெரும்பாலான மக்கள் போலிதேர்தல் வாக்குறுதிகளுக்கு மயங்கி ஏமாந்து போனார்கள். அனுமதி பெறாத குடியிருப்பு மற்றும் வீடுகளுக்கு சீல்வைப்பு, இடிப்பு நடவடிக்கைகளில் சிக்கி பலர் வேதனைப் பட்டனர்.

இப்படி தவித்த 40 லட்சம் மக்களின் வசிப்பிடங்களை நிரந்தரப்படுத்தி புதிய விடியலை ஏற்படுத்தித்தரும் வாய்ப்பு எனக்கும் பாஜக அரசுக்கும் கிடைத்திருப்பதை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...