தொழில் விரிவாக்க நடவடிக்கைக்காக நாட்டின் எந்தமூலைக்கு சென்றாலும் மத்தியஅரசு தோளோடு தோள்கொடுக்கும் என்றார் .  அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவை 5 லட்சம்கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றவர், இது  முதற்கட்டம்தான் அதையும் தாண்டி பெரிய இலக்குகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்றார் .  வரி செலுத்துவோருக்கு வருமானவரித் துறைக்கும் இடையே நெருக்கமும் வரி செலுத்துவதில் வெளிப்படை தன்மையையும்  உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.  அடுத்த 10 ஆண்டுகள் இந்தியா தொழில் முனைவோருக்கான காலமாக  இருக்கும் என்று கூறுவதில் எந்த தயக்கமும் இல்லை என்றார்.