பசுமை பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கியபங்கை ஆற்றும்

சுற்றுச் சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கியபங்கை ஆற்றும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
வன விலங்குகளின் பாதுகாப்பு குறித்த ஐ.நா. மாநாடு, குஜராத்மாநிலம் காந்தி நகரில் நடைபெற்றது. இதில் காணொலிகாட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி கூறியதாவது:-

நாட்டின் வனப்பரப்பு 21 .67 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனங்களின் எண்ணிக்கை 745 ல் இருந்து 870 ஆக உயர்ந்துள்ளது.

புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிக்கும் இலக்கு எட்டப் பட்டுள்ளது. இமயமலையின் உயரமான சிகரங்களில் வசிக்கும் பனிச்சிறுத்தைகளை பாதுகாப்பதற்காக சிறப்புத்திட்டம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படா வகையில், 450 மெகாவாட் மறுசுழற்சி மின்உற்பத்தி செய்யப்பட்டு மின்வாகனங்கள், ஸ்மார்ட் சிட்டிகள், நீர்வள பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பசுமை பொருளாதாரத்தை வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கியபங்கை ஆற்றும்.

பாரீஸ் உடன்பாட்டின் அம்சங்களை அதிகம் அமல்படுத்தியுள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. முக்கிய கவனம்பெரும் உயிரின பாதுகாப்பு திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது எனக்கூறினார்.

இயற்கையுடன் நல்லிணிக்கமாக வாழவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில், இந்தமாநாட்டின் சின்னமாக தென்னிந்தியாவின் கோலம் அமைந்திருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிரதமர் மோடி உரையில் குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...