தி மு கவை தானே தாங்கள் ‘நாய்கள்’ என்று அழைத்திருக்க வேண்டும் ?

பார்ப்பனர்களை அண்டிபிழைத்த, மண்டியிட்டு பிழைத்த, ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர் பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டுகொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக்கொண்டிருக்கும் திமுகவை தானே தாங்கள் ‘நாய்கள்’ என்று அழைத்திருக்க வேண்டும் ? நன்றியுள்ள வர்களாக இருந்திருக்க வேண்டும்? என்று திருப்பதி கேட்டுள்ளார்.

பார்ப்பனர்களை ‘நாய்கள்’ என்று பேசியிருக்கிறார் திமுக.,வின் அமைப்புசெயலாளர் ஆர் . எஸ்.பாரதி. அவரின் கவனத்திற்கு……. 1967ம் ஆண்டு, பதவி சுகத்திற்காக, ஆட்சி அதிகாரத் திற்க்காக ஈ.வெ.ராவை எதிர்த்து ராஜாஜி என்ற பார்ப்பனரை துணைக்கு அழைத்து கூட்டணி ஏற்படுத்தி கொண்டுதான் வெற்றிபெற முடிந்தது திமுக வால் என்பதை மறந்து விட வேண்டாம்.

 

1971ம் ஆண்டு ‘காஷ்மீரத்து பாப்பாத்தி’ என்று கருணாநிதியால் அழைக்கப்பட்ட இந்திரா காந்தி என்ற பார்ப்பனரோடு கூட்டணி அமைத்ததாலேயே கருணாநிதியின் தி மு க ஆட்சி அமைக்க முடிந்தது என்பதை மறந்துவிட்டதா திமுக? 1989 ம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் ஜானகி எம் ஜி ஆர் என்ற இருபார்ப்பன சமுதாய பெண்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலேயே, திமுக ஆட்சியை பிடிக்க முடிந்தது என்பதை மறுக்க முடியுமா?

1996 ம் ஆண்டு ‘சோ’ என்ற பார்ப்பனரின் முயற்சியால்தான் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும், ரஜினியின் அறைகூவலும் கிடைக்க பெற்று திமுக வெற்றிபெற்றது என்பதை மறைக்க முடியுமா? 2006 ம் ஆண்டு நான் ‘பூணூல் அணிந்த பார்ப்பனன்’ என்று தன்னை அழைத்துகொண்ட ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சியின் துணையோடு தான் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற ‘மைனாரிட்டி ‘ ஆட்சியை திமுகவால் பிடிக்கமுடிந்தது என்பதை மறுக்கவோ,மறைக்கவோ முடியுமா?

மேலும்,1999 ம் ஆண்டு வாஜ்பாய் என்ற பார்ப்பனரின் தலைமையில்தான் திமுக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது என்பதையும், 2004 மற்றும் 2009 ம் ஆண்டு காஷ்மீரத்து பாப்பாத்தி என்று கருணாநிதியால் அழைக்கபட்ட இந்திராவின் பேரன், பூணூல் அணிந்த பார்ப்பனர் என்று மார்தட்டிக் கொண்ட ராகுல் காந்தியின் பார்ப்பன காங்கிரஸ் கட்சியுடன் தலைமையில்தான் மத்தியில் ஆட்சி அதிகாரம் செலுத்தி 2ஜி வரலாறுபடைக்க முடிந்தது என்பதை மறந்து விட வேண்டாம்.

பதவிசுகம் பெறுவதற்கு, ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு துணையாய் இருந்த ‘பார்ப்பனர்களை’ நாய்கள் என்று அழைக்கிறீர்களே தி மு க அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்களே, பார்ப்பனர்களை அண்டிபிழைத்த, மண்டியிட்டு பிழைத்த, ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்கபோட்டு கொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக்கொண்டிருக்கும் தி மு கவை தானே தாங்கள் ‘நாய்கள்’ என்று அழைத்திருக்க வேண்டும் ? நன்றியுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும்? தவறு செய்துவிட்டீர்கள் ஆர் எஸ் பாரதி அவர்களே, தவறு செய்து விட்டீர்கள்! என்று கூறியுள்ளார் நாராயணன் திருப்பதி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...