9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் அரசின்கையிருப்பில் உள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது வினியோகதுறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறி உள்ளார்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை மத்திய அரசு மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய அமைச்சர் பஸ்வான் நிருபர்களுக்குபேட்டி அளித்தார்.
அப்போது கூறியதாவது:-
9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளன. கடந்த 10-ந்தேதி நிலவரப்படி அரசின்சேமிப்பு கிடங்குகளில் 299.45 லட்சம் டன் அரிசி, 235.33 லட்சம்டன் கோதுமை என மொத்தம் 534.78 லட்சம் டன் அரிசியும், கோதுமையும் உள்ளன.
இப்போது அறுவடை காலம் என்பதால், புதிதாக அரசின் தொகுப்புக்குவரும் உணவு தானியங்களையும் சேர்த்து நம்மிடம் கையிருப்புக்கு வரும் உணவுதானியங்கள் 2 ஆண்டுகளுக்கு போதுமானதாக இருக்கும். மக்களுக்கு உணவுதானியங்கள் கிடைப்பதில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் மத்திய அரசு மிகவும் கவனமாக உள்ளது.
நாடுமுழுவதும் உணவு தானியங்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலும், வினியோகம் செய்வதிலும் எந்தபிரச்சினையும் இல்லை. இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தபணி சிறப்பாக நடைபெறுகிறது. ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு உரியநேரத்தில் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
பொதுவினியோக திட்டத்தின் கீழ் ஒருமாதத்துக்கு 60 லட்சம் டன் உணவு தானியம் மக்களுக்கு வினியோகம் செய்யப் படுகிறது. இது தவிர பருப்பும் வழங்கப்படுகிறது. மாதம் 35 கிலோ உணவுதானியம் பெறும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள அந்தியோதயா திட்ட பயனாளிகளுக்கு, அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ ஒதுக்கீடு செய்யப் பட்டு இருக்கிறது.
கட்டுப்பாடுகளை நீக்கி, பொது வினியோக திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு 3 மாதங்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்கவேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு இருக்கிறது.
ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலக் கட்டத்தில் உணவுப் பொருட்கள் சப்ளையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதுபெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அப்படி ஒருசூழ்நிலை ஏற்படாமல் இருக்க அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
ஊரடங்கு காலத்தில் யாரும் பட்டினியால் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |