மனைவியுடன் காரில் சென்ற அர்னாப் மீது தாக்குதல்

ரிபப்ளிக் டிவி அர்னா கோஸ்வாமி உண்மையை அப்படியே புட்டு உடைப்பவர், வெளி நாட்டு நன்கொடைகளுக்கு  ஆசைப்பட்டு போலி மதச்சார்பின்மை பேசும் பெரும்பாலான இந்திய ஊடகங்களின் மத்தியில் உண்மையை மட்டுமே பேசக்கூடிய ஒரு சில ஊடகங்களில் இவரது ஊடகமும் ஒன்று.

இந்த நிலையால் நேற்று ரிபப்ளிக் தொலைக்காட்சியில் நடந்த ஒருவிவாதத்தில் அர்னாப் கோஸ்வாமி, சோனியா காந்திமீது கடும் கண்டனங்களை வைத்தார். சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் மூன்று சாமியார்கள் காங்கிரஸ் நபர்களால் தாக்கப்பட்டது குறித்து சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி மௌனமாக இருக்கிறார்கள் என்றும், இதே வேறுமதத்தவர் தாக்கப்பட்டால் ’இத்தாலி சோனியா காந்தி’ உடனடியாக பேசியிருப்பார் என்றும் அவர் கூறினார். அர்னாப் கோஸ்வாமியின் இந்தபேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக அவர் மன்னிப்புகேட்க வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு அர்னாப் கோஸ்வாமி தனது மும்பை அலுவலகத்தில் இருந்து காரில் தனதுமனைவியுடன் வீட்டுக்குச் சென்றுகொண்டு இருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரதுகாரை வழிமறித்து அவரையும் அவரது மனைவியையும் தாக்கியதாக தெரிகிறது

இதனால் ஆத்திரமடைந்த அர்னாப் கோஸ்வாமி அந்த இருவரையும் கைதுசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் காங்கிரஸ் கைக் கூலிகள் என்றும் ஆவேசமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...