முன்னணி நாடுகளில் கொரோனா சோதனையளவு 5 லட்சமாக இருந்தபோது, அந்த நாடுகளிலிருந்த பாதிப்பு எண்ணிக்கையைவிட இந்தியாவில் மிகக்குறைந்த அளவே பாதிப்பு எண்ணிக்கை உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தனது ட்வீட்டர் பதிவில், முன்னணி நாடுகளில் கொரோனா சோதனை அளவு 5 லட்சமாக இருந்தபோது, அந்த நாட்டிலிருந்த பாதிப்பு எண்ணிக்கையைவிட இந்தியாவில் மிகக்குறைந்த அளவே பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்தியஅரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் சுவாரஸ்யமான உண்மைகளை நமோசெயலி பயனாளர்கள் தெரிந்துகொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், நமோ செயலியில், தன்னார்வலர்கள் பக்கத்தில் #IndiaFightsCorona என்ற உங்கள் குரல்பிரிவில் சில சுவாரஸ்யமான தகவல்களையும் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி, 23,452 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 723 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்தெரிவித்துள்ளது.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |