இந்தியா ‘உலகின் மருந்தகம்’

இன்று நடைபெற்ற  அணிசேரா நாடுகளின் மாநாட்டில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்கிறார். அணிசேரா இயக்கம் எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். 2011ம் ஆண்டு நிலவரப்படி, இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர் களாகவும் உள்ளனர்.

இந்தஇயக்கம் 1961-ம் ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. யுகோசுலாவியாவின் அதிபராக இருந்த சோசப்பு பிரோசு டிட்டோ, இந்தியாவின் முதல்பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் இரண்டாவது தலைவர் ஜமால் அப்துல் நாசிர், கானாவின் முதல் தலைவர் குவாமே நிக்ரூமா மற்றும் இந்தோனேசியாவின் முதல்தலைவர் சுகர்ணோ இவர்களின் கருத்தாக்கத்தில் இந்த இயக்கம் துவங்கியது. இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும்நாடுகள் செல்லவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர்.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவிகேற்றப்பின், 2016-ம் வெனின்சுலாவில் நடந்த அணிசேரா நாடுகளின் பட்டியலில் கலந்துகொள்ளாமல் முதல்முறையாக தவிர்த்தார். தொடர்ந்து, 18-வது அணிசேரா நாடுகளின் மாநாடு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இதிலும் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. இந்தமாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக உள்ளதே மோடி இந்தமாநாட்டை தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அணிசேரா நாடுகளின் மாநாடு அஜர்பைசான் அதிபர் இல்ஹாம் அலிவேவ் தலைமை இன்று நடந்தது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளதால், இந்த முறை மாநாட்டில் பங்கேற்றார்.

அதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது;

  • மனிதநேயம் ஒருபெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது; COVID-19 ஐ சமாளிக்க NAM பங்களிக்கவேண்டும்.
  • NAM உலகின் தார்மீகக் குரலாக இருந்துவருகிறது; அது அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.
  • இந்தியா ‘உலகின் மருந்தகம்’ என்று கருதபடுகிறது; COVID-19 பாதிப்பை அடுத்து 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பியுள்ளோம். உலகம் COVID-19 உடன் போராடுகையில், சிலர் சமூகங்களையும் நாடுகளையும் பிளவு படுத்த பயங்கரவாதம், போலிசெய்திகள் மற்றும் மெய்நிகர் வீடியோக்கள் போன்ற வேறுசில கொடிய வைரஸ்களை பரப்புவதில் மும்முரமாக உள்ளனர்.
  • COVID-19 தற்போதுள்ள சர்வதேச அமைப்பின் வரம்பைக் காட்டுகிறது. COVID க்குப் பிந்தைய உலகில், நேர்மை, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் உலக மயமாக்கலின் புதிய வார்ப்புரு நமக்குத்தேவை. இன்றைய உலகின் அதிக பிரதிநிதிகளான சர்வதேச நிறுவனங்கள் நமக்குத் தேவை என்றார்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...