ஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்

கரோனா தொற்றுபாதிப்பில் இருந்து ஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்வதாக பிரதமர்  கூறியுள்ளார்.

புத்த பூா்ணிமாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திரமோடி பங்கேற்று காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.

கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்கள், அந்த நோய்த் தொற்றுக்கு எதிராக போராடுவோா் உள்ளிட்டோருக்காக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, உலகம் முழுவதும் தன்னலம் கருதாமல், பிறரின் நலனுக்காக உழைக்கும் அனைவரையும் பாராட்டுவது மிகச்சரியாக இருக்கும்.

கரோனா தொற்றில் இருந்து ஒவ்வொரு குடிமக்களையும் காக்க இந்தியா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு உதவி, இந்திய மக்கள் வலிமையுடனும், தன்னலம் கருதாமலும் ஒன்றுபட்டு உள்ளனர். இந்தியாவின் வளர்ச்சி என்பது எப்போதும் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் மோடி தெரிவித்தார்.

மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் சா்வதேச பௌத்தகூட்டமைப்பு சாா்பில் ஏற்பாடு செய்யபட்ட மெய்நிகா் பிராா்த்தனை நிகழ்வில் உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் உள்ள பௌத்த மதத் துறவிகள் மற்றும் அமைப்பின் தலைவா்கள் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...