கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 80 கோடி பேருக்கு இலவச உணவு

பிரதமரின் கரீப்கல்யாண் திட்டத்தின் கீழ் நாடுமுழுக்க சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள், பருப்பு வகைகளை இலவசமாக வழங்குவதற்கு  ஏற்பாடுகள் நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜ்னா” திட்டத்தின் கீழ் அனைத்து மாநில மக்களுக்கும்  உணவு தானியங்கள் அளிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் இந்தத் தகவலை இன்று தெரிவித்தார்.

இதற்காக இந்திய உணவுக் கார்ப்பரேசன் நிறுவனம் 2641 ரயில் பெட்டிகளில் கோதுமை மற்றும் அரிசிகளை ஏற்றியுள்ளது. மொத்தம் 73.92 இலட்சம் மெட்ரிக்டன் அளவுக்கு (அரிசி 55.38 இலட்சம் மெட்ரிக் டன், கோதுமை 18.57 இலட்சம் மெட்ரிக் டன்) ஏற்றப்பட்டுள்ளன. 24.03.2020 (நாடு முழுக்க முடக்கநிலை அமல் செய்யப்பட்ட தேதி) நாளில் இருந்து 08.05.2020 வரையிலான காலத்தில் இதுதான் அதிக அளவிலான உணவுதானிய நகர்வுக்கான ஏற்பாடாக இருக்கிறது.

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ் ஏப்ரல் மாத விநியோகத்தில் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமாக பணிகளை முடித்து விட்டன. இந்த 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சுமார் 41.35 கோடி பயனாளிகளுக்கு இவை வழங்க பட்டுள்ளன. அந்தமான் நிக்கோபர்தீவு, தாத்ராநகர் மற்றும் ஹவேலி, டாமன் & டையூ, மத்தியப்பிரதேசம், ஒடிசா, புதுச்சேரி, இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டத்தின்கீழ் இரண்டு மாதத்துக்கான உணவு தானியங்கள் ஒரே தவணையில் வழங்கப்படுகின்றன என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படியான குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் சுமார் 6 கோடிபேருக்கு விசேஷ குறுஞ்செய்தித் தகவல்களை 20 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அனுப்பியுள்ளன. பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். கூடுதல் ஆதாயம்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த குறுஞ் செய்தித் தகவல்கள் கைபேசிகளுக்கு அனுப்ப பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பல்வேறு பொருளாதார சங்கடங்களை ஏழைகள் எதிர்கொள்வதற்கு உதவும்வகையில் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம் அமல்படுத்தப் படுகிறது. பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ள ஏழைக் குடும்பம் அல்லது ஏழைகள் யாரும், அடுத்த 3 மாதங்களுக்கு உணவுதானியம் கிடைக்காமல் துன்புறக்கூடாது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

அதன்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 80 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படியான குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் பயனாளிகளுக்கும் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் கூடுதல் உணவு தானியங்களை, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாத காலத்துக்கு வழங்குவதற்கான கொள்கை முடிவை, உணவு மற்றும் பொது விநியோகத்துறை எடுத்துள்ளது. ரொக்க உதவிகளை நேரடியாகக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை அமல் செய்யும் யூனியன் பிரதேசங்களும் இதில் அடங்கும்.

உணவு தானியங்கள் தவிர, 19.50 கோடி குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு கிலோ பருப்பு வகைகளையும் அரசு வழங்குவதாக அமைச்சர்பாஸ்வான் கூறினார். முதன்முறையாக நுகர்வோர் விவகாரங்கள் துறை இவ்வளவு அதிக அளவில் பருப்பு வகைகளைக் கையாள்கிறது என்றார் அவர். நாடுமுழுக்க நாபெட் கிடங்குகளில் இருப்பில் உள்ள பருப்புகளை இத் திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக இதுவரையில் 100க்கும் மேற்பட்ட பருப்பு மில்களின் சேவையை நாபெட் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

அதிகரித்து வரும் தேவைகளை சமாளிப்பதற்கு ஏற்ற அளவில் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், கொள்முதல் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்து வருவதாக குறிப்பிட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...