பொதுகருத்து சுதந்திரம் திருமாவளவன்களுக்கு தானா?

விடுதலை சிறுத்தைகள் கட்சிநிறுவனர் திருமாவளவன் குறித்து ஒரு கார்ட்டூன் இரண்டு தினங்களுக்கு முன்பு வர்மா கார்ட்டூனிஸ்ட் வரைந்திருந்தார். அந்தகார்ட்டூன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் வைரல் ஆனது. இதை பார்த்து கடுப்பான வசிக கார்ட்டூனிஸ்ட் வர்மாமீது வழக்கு பதிவு செய்தது.

இப்பொழுது கேள்வி என்னவென்றால்

இதற்கு முன்னாள் பாலாகார்ட்டூனிஸ்ட் என்பவர் தமிழக முதல்வரை நிர்வானமாக கார்ட்டூன் வரைந்தார். அதற்கு எந்த விதமான கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சம்மந்தப்பட்ட திருமாவளவன் அவர்கள் ஹிந்துமத கடவுள்களை அசிங்கமாக பேசியுள்ளார் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, சிவன் கோவில்களை இடிப்பேன் தகர்ப்பேன் என்றுகூறினார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை, டெல்லியில் இருந்துகொண்டு தென்மாவட்டங்களை தீப்பிடிக்க வைக்க முடியும் என்று பொது வெளியில் பேசினார் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை, அனைத்து சமுதாய ஆண்களுக்கும் ஆண்மை இல்லை எங்களிடம்தான் சரக்குமிடுக்கு உள்ளது என்று மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி ஜாதிய கலவரங்கள் தூண்டும்படி பேசினார் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இவ்வளவு வார்த்தைகளை பயன்படுத்தியவர் மீது ஏன் இன்னும் காவல்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை ?

திருமாவளவன் பேசிய அனைத்தையும் கார்ட்டூன்வரைந்தால் உடனடியாக பிசிஆர் (PCR) போட்டு அந்த நபரை கைது செய்கிறது காவல்துறை. ஏன் இந்தபாகுபாடு ? இது எந்தவகையில் நியாயம் ? கார்ட்டூன் என்பது ஒருகலை. யார் வேண்டுமானாலும் இங்கு கார்ட்டூன் வரையலாம், அனைவருக்கும் இங்கு கருத்துசுகந்திரம் இருக்கிறது பிறகு ஏன் காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. கார்ட்டூனிஸ்ட் பாலா மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லை ? ஆனால் கார்ட்டூனிஸ்ட் வர்மா-வை கைது செய்வதென்பது காவல் துறையும், அரசும் ஒருதலை பட்சமாக செயல் படுகிறதோ என்ற அச்சம் அனைவர்க்கும் எல தொடங்கியுள்ளது.

தாழ்த்தப்பட்ட சமூகம் என்ற பிம்பத்துக்கு பின்னல் ஒளிந்துகொண்டு கருத்துரிமையை சிதைக்கும் விசிகவினர். இதற்கு காவல் துறையும், அரசும் தெரிந்து தெரியாததை போல துணைபோவது ஜனநாயகத்தை அளிக்கும் செயல்.

யாரை வேண்டுமானாலும் இவர்கள் கார்ட்டூன் போடலாம் அசிங்கப் படுத்தலாம். அதை பார்த்து இங்கு உள்ள மற்ற சமூகத்தினர் வாய்பொத்தி நிற்க வேண்டுமென்ற ஆதிக்க திமிரை இவர்களுக்கு யார்கொடுத்தது ?

ஆனால் இவர்களுக்கு எதிர்வினை யாற்றினால் அவர்களை தொலை பேசி மூலம் தொடர்புகொண்டு மிரட்டுவது அல்லது பிசிஆர் (PCR) போட்டு ஒடுக்குவது போன்ற செயலில் ஈடுபட்டு ஒருபெரும்பான்மை சமூகத்தை இவர்கள் தொடர்ந்து அச்சபடுத்தி கொண்டு தான் வருகிறார்கள். பொதுகருத்து சுதந்திரம் தங்களை தவிர வேறுயாருக்கும் இல்லை என்ற ஆதிக்கதிமிர் மனிநிலைக்கு இவர்கள் வந்ததற்கான காரணம் என்ன ?

நன்றி கண்ணன் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்க ...

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்கள் மோடி தலைமையிலான 3.o அமைச்சரவை பதவியேற்கும் நிலையில், இதில் ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முற ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...