யாரோ ஒருவர் என்னை குற்றம் சாட்டுவது குறித்து கவலையில்லை

கட்சியில் இருந்து விலகுபவர்கள் என்னை வாழ்த்தவேண்டும் என்பது கிடையாது. யாரோ ஒருவர் என்னை குற்றம் சாட்டுவது குறித்து கவலையில்லை என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: சென்னையில் கனிமொழி பங்கேற்றகூட்டத்தில் பெண் போலீசிடம் அத்துமீறிய திமுக.,வினர் மீது 2 நாட்களாக ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் விளக்கம் அளிக்க வேண்டும். திமுக.,வினர் நிர்பந்தம் கொடுத்தனரா, அமைச்சர் அழுத்தம் கொடுத்தனரா என விளக்கவேண்டும்.

புதுக்கோட்டையில் தொடர்ந்து ஒரேகிராமத்தில் பிரச்னை ஏற்படுகிறது. எறையூர் கிராமத்தில் ஒரேமாதத்தில் பிரச்னை நடக்கிறது. இரட்டை டம்ளர் முறை, கோவிலில் சாமிகும்பிடுவதில் பிரச்னை, குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட பிரச்னை என நடந்துள்ளது. ஜாதி இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என திமுக சொல்கிறது.

ஆனால், என்ன நிலையில் இருக்கிறது என்பதற்கு எறையூர் கிராம பிரச்னையேசாட்சி.இது எல்லாம் முதல்வர் கவனத்திற்கு சென்றதா. அங்கு அமைதி பேச்சு வார்த்தை நடந்ததா, இந்த குற்றத்தை செய்தது யாராக இருந்தாலும்கூட அவர்கள் மீது தனிப்படை போட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து தமிழக மக்களின் கேள்வியாக உள்ளது.

திராவிட மாடல் அரசின் ஆர்கே நகர் தொகுதி திமுக எம்எல்ஏ எபினேசர் முன்னிலையில், மாநகராட்சி ஊழியரை கட்டாயப் படுத்தி வெறும் கைகளால் கழிவுநீர் சாக்கடையை சுத்தம்செய்ய வைக்கப்பட்டுள்ளார். அதனை திமுக எம்எல்ஏ ரசித்துகொண்டு இருக்கிறார்.

அவர் மீது 1993ல் கொண்டுவந்த சட்டத்தை பதிவுசெய்ய வேண்டும். இந்த சட்டத்தில் ஒராண்டு கடுங்காவல் சிறை தண்டனையுடன் பெயில் கிடைக்காது. எம்எல்ஏ மீதும் வன்கொடுமை சட்டத்தின்கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இது அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும்.

எம்எல்ஏ தன்னை ஹீரோவாக காண்பிக்க, மாநகராட்சி ஊழியரை வெறும்கைகளால் சுத்தம் செய்ய வைத்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து , கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். இதனை செய்தால், தமிழக மக்களுக்கான முதல்வர். சமூகநீதியை நிலைநாட்டக்கூடிய முதல்வர் என கூறலாம். இல்லையென்றால், ஜாதி ஆதிக்கம் மிகுந்த கட்சிதான் திமுக. இது புதுக்கோட்டையில் இருந்து தெரிகிறது.

திமுக.,வை சேர்ந்த முன்னாள் எம்.பி., மஸ்தான் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் எம்.பி.,க்கே பாதுகாப்பு இல்லாதசூழல் நிலவுகிறது. கொலையை செய்தவர்களுக்கு தைரியம் எங்கு இருந்துவந்தது. மஸ்தான் மனைவி சண்டையிட்டு பிரேத பரிசோதனை செய்த பிறகுதான், முடிவு கிடைத்துள்ளது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இப்படி தான் உள்ளது.

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை, பாரத் தோடோ யாத்திரையாக மாறியுள்ளது. யாரெல்லாம் இந்தியாவை பிரிக்கிறார்களோ அவர்களுடன் இணைந்து ராகுல் நடக்கிறார். நேற்று ரா முன்னாள் தலைவர் துலாத் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னர், பாகிஸ்தான் உளவுத் துறையான ஐஎஸ்ஐ அமைப்பு தலைவர் துரானியுடன் இணைந்து புத்தகம் எழுதியுள்ளார். அவர்மீது ஏராளமான புகார் உள்ளது. அவரை போன்ற நபர்களுடன் இணைந்து ராகுல்நடக்கிறார். துலாத்தின் பேச்சை 6 மாதமாக இந்தியா கவனித்துகொண்டுள்ளது. இவர் ஐஎஸ்ஐ க்கு ஆதரவாகவும், எல்லை தாண்டிய தாக்குதல் குறித்து இந்தியாவை குற்றம்சாட்டியும் பேசியுள்ளார்.

கட்சியில் இருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்த்திவழியனுப்புவது தான் எனது கொள்கை. கட்சியில் இருந்து வெளியே செல்கிறவர்கள் என்னையும், கட்சியையும் புகழ்ந்து பேசிவிட்டு செல்லவேண்டும் என்பது கிடையாது. மகளிர் அதிகம்பேர் பாஜ.,வில் இணைகின்றனர். யாரோ ஒருவர் புகார் கூறினால் அதுபற்றி கவலையில்லை.

என் மீது குற்றம் சொல்லாதவர்கள் யார். என்மீது குற்றம்சொல்வது சரிதான். அப்போதுதான் பேசுபொருளாக இருக்க முடியும். எந்த பத்திரிகை என்னை பற்றி சொன்னாலும் அவர்களுக்கு பதில் மவுனம்தான். கட்சியில் இருந்து விலகுபவர்களுக்கும் அதேபதில்தான். அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.

ஆதார் இருக்கும் போது மக்கள் ஐ.டி., எதற்காக கொண்டு வரவேண்டும். தனி நாட்டிற்கான அடித்தளம் குறித்து திமுக கனவில்கூட நினைத்து பார்க்க கூடாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வளர்ந்த இந்தியாவிற்கான விருப் ...

வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கன அடித்தளம் வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை ...

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி கடைசி நபரையும் சென்றடைந்தது முதலீடு மற்றும் கட்டமைப்பு ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல் பசுமை வளர்ச்சி இளைஞர் சக்தி ...

நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன ...

நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் பட்ஜெட் நம் நாட்டில் கடினமாக உழைக்கும் நடுத்தர வர்க்கத் தினருக்கு ...

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய் ...

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது படஜெட் மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டு க்கான பொதுபட்ஜெட்டை மக்களவையில் ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...