ரஷ்ய சீன உறவில் விரிசல்?

கொரோனா பரவல் உலகம் முழுக்க வேகம் எடுத்துள்ள நிலையில் தற்போது, சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது.ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரிக்கதொடங்கி உள்ளது. முதலில் மெதுவாக உயர்ந்த கேஸ்கள் தற்போது வேகமாக தினமும் 10 ஆயிரம் என்ற வீதத்தில் பரவதொடங்கி உள்ளது. அங்கு 2,90,678 கொரோனா கேஸ்கள் உள்ளது.

உலகிலேயே கொரோனாவால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது பெரிய நாடாக ரஷ்யா மாறியுள்ளது. அங்கு 2722 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

ஆனால் கொரோனாபரவல் தொடங்கிய சமயத்தில் சீனாவை உலகநாடுகள் எதிர்த்தது போல ரஷ்யா எதிர்க்கவில்லை. ரஷ்யா தொடர்ந்து சீனாவிற்கு தனது ஆதரவை அளித்துவந்தது. அதிலும் கொரோனா குறித்து ரஷ்யா எந்தபுகாரும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா தொடர்ந்து கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்று கூறிவந்தது. ஆனால் ரஷ்யா அதை கவனத்தில் கொள்ளவில்லை. ரஷ்யா – சீனா உடனான நட்பு எப்போதும்போல இருந்தது.

அதேபோல் சீனாமீது வைக்கப்பட்ட புகார்களையும் ரஷ்யா எதிர்த்தது. கொரோனா வைரஸ் செயற்கையாக உருவானது என்றவாதத்தை ரஷ்யா ஏற்கவில்லை. அமெரிக்கா கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்தபுகாரை உலக நாடுகள் பல ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவும் கூட ஏற்கும்நிலையில் உள்ளது . ஆனால் ரஷ்யா இதில் பெரிதாக கவனம் செலுத்த வில்லை . அதோடு சீனாவும் ரஷ்யாவிற்கு மருத்துவ ரீதியான உதவிகள் செய்துவந்தது. தனது மருத்துவ குழுவை சீனா ரஷ்யாவிற்கு அனுப்பியது.

நிலைமை இப்படிஇருக்க இரண்டு கம்யூனிஸ்ட் நாடுகளுக்கும் இடையே தற்போது பெரியவிரிசல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்டின் உறவிலும் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது. இதற்கு முதல்காரணம் சீனாதான். ரஷ்யா கடந்தமாதம் சீனா அருகே இருக்கும் தனது எல்லைகளை மூடியது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ரஷ்யா தனது எல்லையை மூடியது . இதை சீனா கடுமையாக கண்டித்த காரணத்தால் இரண்டுநாடுகளுக்கும் மோதல் ஏற்பட்டது.

சீனாவிற்கு அருகே இருக்கும் எல்லைகளை ரஷ்யா முடியதை ஏற்கமுடியாது. ரஷ்யா எங்களிடம் அறிவிக்காமல் எல்லையை முடியதை ஏற்கமுடியாது என்று சீனா கூறியது. இது சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வார்த்தை போராகமாறியது. அதன்பின் இரண்டாவதாக, ரஷ்யாவில் வேகமாக கொரோனா கேஸ்கள் அதிகரித்துவருகிறது. அங்கு 8 நாட்களில் 1 லட்சம் கேஸ்கள் வந்துள்ளது. உலகில் இரண்டாவது பெரியகொரோனா பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா மாறியுள்ளது.

இதனால் மக்கள் சீனாமீது கோபம் கொண்டனர். இப்படி அதிகரிக்கும் கேஸ்களாக சீனாவை கண்டிப்பாக எதிர்க்கவேண்டிய கட்டாயத்திற்கு ரஷ்யா சென்றுள்ளது. அதேபோல் ஊரடங்கு காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் சீனா தொடர்ந்து ஏற்றுமதியை செய்துவருகிறது. ரஷ்யாவிற்கு இது ஒருவகையில் கோபத்தை உண்டாக்கி உள்ளதால் சீனா மீது ரஷ்யா கோபத்தில் உள்ளது. அதேபோல் அந்நாட்டு அதிபர் புடினுக்கும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் உள்ளது.

கொரோனா வைரஸை சரியாக கட்டுப்படுத்த வில்லை, அதிபர் தலைமறைவாகி விட்டார் என்று புடின் மீது புகார் இருக்கிறது. இதனால் தனக்குவைக்கப்படும் அரசியல் ரீதியான அழுத்தத்திற்கு கொரோனா வைரஸ்தான் காரணம் என்று புடின் நினைக்கிறார். இதற்கு சீனாதான் காரணம் என்ற கோபத்தில் அவர்இருக்கிறார். இதுவும்கூட சீனா – ரஷ்யா இடையே சண்டை வர காரணம் ஆகும். அதேபோல் இன்னொரு பக்கம் ரஷ்யா – அமெரிக்கா இரண்டு நாடுகளும் ஒன்றாக சேர தொடங்கி உள்ளது.

ரஷ்யாவுடன் அமெரிக்கா ஒன்றாகசேர்ந்து பணியாற்றும் என்று இரண்டு நாடுகளும் உறுதிபூண்டு இருக்கிறது. இதற்காக இரண்டு நாடுகளும் அறிக்கை வெளியிட்டனர். பல வருட எதிரிகள் இப்போது ஒன்றாகி உள்ளனர். கொரோனாவை ஒன்றாக எதிர்ப்போம் என்று இரண்டுபேரும் கூறியுள்ளனர். இது சீனாவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. உலகளவில் சீனா தனக்கு நண்பன் இல்லாத நிலையை அடைந்துள்ளது.

அதிபர் டிரம்பும், அதிபர் புடினும் இதற்காக தொலைபேசி வழியாக பேசிக் கொண்டனர். இருவரும் நெருக்கம் ஆகியுள்ளனர். அமெரிக்காவுடன் ரஷ்யா நெருக்கம்காட்டுவது சீனாவுடனான அதன் உறவை முறிக்கதொடங்கி உள்ளது. பலவருடங்களாக நெருக்கமான நட்பு நாடுகளாக இருந்த ரஷ்யா – சீனா இடையே ஏற்பட்டுள்ள இந்தவிரிசல்.. இன்னும் பெரிதாகும் என்று கூறுகிறார்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...