சிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன்வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் கோடியும் அடங்கும்.

ரூ.20 லட்சம்கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தில் 9.25சதவீத வட்டியில் 100 சதவீத உத்தரவாத்ததுடன் அளிக்கப்பட்ட கடன் உதவி மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று நிர்மலா சீதாராமன்தெரிவித்திருந்தார். தற்போது சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி 9.5 சதவீதத்தில் இருந்து 17 சதவீதம்வரை உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாகத் திகழ்வது சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள்தான். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இவற்றின் பங்களிப்பு 28 சதவீதமாக உள்ளது. அதேபோல நாட்டின் ஏற்றுமதியில் இத்துறையின் பங்களிப்பு 40 சதவீதமாகும். அத்துடன் இத்துறையின் மூலம் 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிகளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக சிறு, குறு நடுத்தர தொழில்கள் உள்ளன.

மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையால் 45 லட்சம் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இதுதவிர, நொடித்து போன சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு மீண்டும் கடன் உதவி அளிக்கும் வகையில் ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதுதவிர சிறப்பு நிதியம் ரூ. 50 ஆயிரம் கோடியில் உருவாக்க பட்டுள்ளது. இதுவும் இத்துறைக்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...