பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில அரசுடன் கேதார்நாத் மேம்பாடு மற்றும் மறுகட்டுமான திட்டம்குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
கோவிலை மறு கட்டமைக்கும் தமது தொலை நோக்கு பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை, சுற்றுச்சூழலுக்கு உகந்த, இயற்கையுடன் இணைந்து, சுற்றுப்புறங்களை பாதுகாக்கும் வகையில், மாநில அரசு உரியகால அவகாசத்திற்குள் வடிவமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தற்போதைய சூழல் மற்றும் புனித தலங்களுக்கு சுற்றுலாபயணிகள் மற்றும் பக்தர்கள்வருகை மிகவும் குறைவாக உள்ள நிலை ஆகியவற்றை கருத்தில்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகளை நிறைவுசெய்ய தற்போதைய கட்டுமானத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார்.
பணிகளை மேற்கொள்ளும்போது, சமூக இடைவெளி விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆலோசனையில் உத்தரகாண்ட் முதல்மந்திரி திரிவேந்திர சிங் ராவத் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |