நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தித்திறன் 70 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய அணுசக்தித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அணுசக்தித் துறையின் 100 நாள் செயல்திட்டத்தை ஆய்வு செய்வதற்காக நேற்று (25.06.2024) புதுதில்லியில் நடைபெற்ற உயர்நிலைக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் அவர், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை மதிப்பீடு செய்ததுடன் புதிய திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை அமைச்சர் வழங்கினார்.
கூட்டத்தில் பேசிய அவர் உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்து பேசிய அவர், அணுசக்திதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
கதிரியக்க மருந்துகள் மற்றும் அணுசக்தி மருத்துவம், ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். கதிரியக்க தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சாதாரண மக்களின் பொருளாதார மற்றும் சமூக நலனுக்கு வழிவகுக்கும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், அணுசக்தித் துறை செயலாளருமான டாக்டர் அஜித்குமார் மொகந்தி மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |