நேபாளத்துடன் பிரச்சினை களுக்கு பேச்சு வார்த்தை மூலம் சுமூகதீர்வு காணப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள சிலபகுதிகளையும் சேர்த்து நேபாளம் உருவாக்கியுள்ள புதிய வரைபடத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் சனிக் கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கு இந்தியா கடும்கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்துக்கான மக்கள்சந்திப்பு கூட்டத்தில், மத்திய பாதுகாப்பு அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத்சிங் காணொலிகாட்சி மூலம் நேற்று பேசியதாவது:
இந்தியா – நேபாளம் இடையிலான உறவு வரலாற்று, கலாச்சார ரீதியானது மட்டுமின்றி, ஆன்மீக ரீதியாகவும் இருநாடுகளுக்கும் இடையே உறவு உள்ளது. இதை இந்தியா மறக்காது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உலகின் எந்தசக்தியாலும் பிரிக்க முடியாது.
உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து லிபுலேக் கணவாய் வரை நமது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தான் இந்தியா சாலை அமைத்துள்ளது. இந்தசாலை அமைத்தது தொடர்பாக நேபாள மக்களுக்கு தவறானபுரிதல் இருந்தால் அந்நாட்டுடன் பேசுவோம். நேபாளத்துடன் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணப்படும். நேபாளம் குறித்து இந்தியர்களுக்கு எந்த கசப் புணர்வும் இல்லை. இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |