சீனாவை சம பலத்துடனே எதிர்கொள்கிறோம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், முக்கியநாடுகளுடனான உறவு வலுவாகவும், சிறப்பாகவும் உள்ளது. சீனாவை, அரசியல் ரீதியாக, சரி சமமாகவே எதிர்கொள்கிறோம்’ என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான தவறுகள், பொறுப்பின்மை ஆகியவற்றால், கடந்த ஆறுஆண்டுகளில், இந்திய வெளியுறவு கொள்கை, பொருளாதாரம், அண்டை நாடுகளுடனான நட்புறவு ஆகியவை, பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, நாடு பலவீன மடைந்துள்ளதாக, காங்., – எம்.பி., ராகுல் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது டுவிட்டர்’ பக்கத்தில், தொடர்ச்சியான பதிவுகளை, நேற்று வெளியிட்டார்.

அதன் விபரம்: இந்தியாவுடன் நல்லுறவு பாராட்டும், பலமுக்கிய நாடுகளுடனான நட்பு, மிக வலுவாகவும், உயர்வாகவும் உள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன், தொடர்மாநாடுகளும், தலைவர்களுடனான சந்திப்புகளும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சீனாவை, அரசியல் ரீதியாக, சரிசமமாகவே இந்தியா எதிர்கொள்கிறது. இதுபற்றி, நிபுணர்களின் கருத்தை கேட்டாலே, உண்மை நிலவரம் புரியும்.

சீனா — பாக்., பொருளாதார பெருவழிசாலை, எல்லையில் சீனா அத்துமீறி சாலை அமைக்கும் முயற்சி, தென் சீன கடல் விவகாரம், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஐ.நா., தடை போன்றவற்றில், இந்தியா தன் நிலைப் பாட்டை, மிக வெளிப்படையாகவே பேசி வருகிறது.இலங்கை – சீனா இடையிலான அம்பன் தோட்டை துறைமுக ஒப்பந்தம், 2008ல் கையெழுத்தானது. அது பற்றி, நீங்கள் அப்போது கேள்வி எழுப்ப வேண்டியதுதானே. வங்கதேச உடனான எல்லை விவகாரம், 2015ல் முடிவுக்கு வந்தது. அது, பல வளர்ச்சிகளுக்கு வழி வகுத்தது.இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...