தேசியபணியாளர் தேர்வு முகமை வரலாற்று முடிவு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகும் பணியிடங்களை நிரப்புவதற்கு, நாடுமுழுதும், ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக, என்.ஆர்.ஏ., எனப்படும் தேசியபணியாளர் தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை நிரப்புவதற்கு, அந்தந்ததுறைகள் தனித்தனியாக தேர்வுகளை நடத்துகின்றன. ரயில்வே, பொதுத்துறை வங்கிகள் என, ஒவ்வோர் அமைப்புக்கும் தேர்வுமுறைகள் உள்ளன. இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

குறிப்பாக, ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியாக, தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். தேர்வு நடைபெறும் இடத்துக்கு பயணிக்கவேண்டும். வெவ்வேறு நேரங்களில் தேர்வு நடத்தப் படுவதால், தனித்தனியாக அதற்கு தயாராக வேண்டி உள்ளது. இதனால், அரசு வேலை எதிர்பார்ப்போர், அதிகபணம் மற்றும் நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பு பிரச்னையும் உள்ளது.

இந்நிலையை மாற்றும் வகையில், ‘மத்திய அரசுப்பணிகளுக்கு, தேசிய அளவில் ஒரேதேர்வு முறை அறிமுகம் செய்யப்படும்’ என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, தேசிய அளவில் ஓர் அமைப்பை உருவாக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் மற்றும் பிரதமர் அலுவலகத் துறை அமைச்சர், ஜிதேந்திரசிங் கூறியதாவது: மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான, கெசட்டட் அதிகாரி அல்லாத பணிஇடங்களுக்கு, அதாவது, குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளுக்கு பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், நாடு முழுதும், ஒரே மாதிரியான, ஒரே தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்காக, என்.ஆர்.ஏ., எனப்படும், தேசிய பணியாளர் தேர்வு முகமை உருவாக்கப்படுகிறது. இந்தமுகமை மூலம், முதல்கட்ட தகுதித்தேர்வு நடத்தப்படும். இது நாடுமுழுதும் நடத்தப்படும். இதில் பெறும் மதிப்பெண்கள், மூன்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும். தங்களுடைய மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள விரும்புவோர், மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பும் அளிக்கப்படும். இந்த தேர்வை, எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.

இந்த முதல் தகுதி தேர்வின் அடிப்படையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளை தேர்வுசெய்து கொள்ளலாம். இது அடிப்படை தகுதி தேர்வுதான். இதன் மூலம், சில துறைகள் நடத்தும் சிறப்பு தேர்வில் பங்கேற்கும் தகுதியை பெறலாம். ரயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகம், நிதி சேவைத்துறை, எஸ்.எஸ்.சி., எனப்படும் மத்தியப் பணியாளர் வாரியம், ரயில்வே பணியாளர் தேர்வுவாரியம், வங்கிப் பணியாளர் தேர்வுமையம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள், புதிய முகமையின் பிரதிநிதிகளாக இருப்பர்.

தற்போது முதல்கட்டமாக, ரயில்வே பணியாளர் தேர்வுவாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு மையம், மத்தியப் பணியாளர் வாரியம் ஆகியவை நடத்தும் தேர்வுகள், என்ஆர்ஏ.,யின் கீழ் நடத்தப்படும். இதைத்தவிர, பல்வேறு துறைகள் மூலம் நடத்தப்படும், 20க்கும் மேற்பட்ட தேர்வுகளும், இந்த புதியமுகமையின் கீழ், படிப்படியாக கொண்டுவரப்படும்.

தற்போது நாடுமுழுதும், மூன்று கோடி பேர், இந்தத் தேர்வுகளை எழுதுகின்றனர். இவர்கள், இனி தனி தனியாக தேர்வுகளை எழுத வேண்டியதில்லை. தேசிய பணியாளர் தேர்வுமுகமை நடத்தும் தேர்வின் மூலமாகவே, இந்த துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வு செய்யபடுவர்.

முதல்கட்டமாக, 12 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். பின்னர் படிப்படியாக பல்வேறுமொழிகள் சேர்க்கப்படும். குறைந்தபட்சம், ஒருமாவட்டத்துக்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும். இந்த தேசிய பணியாளர் தேர்வு முகமை, சுய அதிகாரம் உள்ள, தொழில்முறையிலான, சிறப்பு வேலைவாய்ப்பு அமைப்பாக இருக்கும். ஆன்லைன் மூலமாகவே திறனறிதேர்வுகள் நடத்தப்படும். அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...