தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சி திமுக

தேசிய உணர்வுகளுக்கு எதிராகவும் தேச வளர்ச்சியில் அக்கறையற்றவர்களின் புகலிடமாகவும் திமுக இருக்கிறது என பாஜக தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கபட்ட பின்னர் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்தசெயற்குழு நடைபெற்றது.

இதில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது: தமிழகம் கோவில்கள் நிறைந்தபூமி. உயரிய பண்பாட்டை கொண்டது. தேசவிடுதலைக்கு பாடுபட்ட எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் மண்இது. உலகம் முழுவதும் தொழில் முனைவோர்களாக தமிழர்கள் திகழ்கின்றனர். தமிழர்களின் உயரியபண்பாட்டுக்கு என் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளிலும் சட்ட சபையில் பாரதிய ஜனதா கணிசமான இடங்களை கைப்பற்றும். நாம் நமது வாக்குவங்கியை அதிகரிக்க வேண்டும்.

கொரோனாகால லாக்டவுன் என்பது அரசியல் கட்சிகளுக்கும்கூட லாக்டவுன் என்பதாகிவிட்டது. இருந்தபோதும் மக்களுக்கு என்னதேவை என்பதை உணர்ந்து தமிழக பாஜக செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் சீரியதலைமையில் கொரோனாவை எதிர்த்து நாம் போராடி வருகிறோம்.

இந்த தேசத்தையும் 130 கோடி மக்களையும் கொரோனாவுக்கு எதிராக உரியநேரத்தில் முடிவெடுத்து தயார்படுத்தியவர் நமது பிரதமர் மோடி. கொரோனா தொடங்கும்போது அதற்கான மருத்துவமனைகள் எதுவும் இல்லை. இன்று 1500 கொரோனா சிறப்பு மருத்துவ மனைகள் உருவாக்க பட்டுள்ளன. 12.5 லட்சம் படுக்கைகள் இன்று தயாராக உள்ளன. இந்தியாவில் 50,000 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நாடுவிடுதலை அடைந்தது முதல் முறையாக சுதந்திரமாக பிரதமர் மோடியின் தலைமையில் புதிய கல்விகொள்கை உருவாக்கபட்டுள்ளது. 1968, 1986-ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட புதிய கல்வி கொள்கை என்பது வெறும் எண்களை மட்டுமே மாற்றியதாக இருந்தது. கொள்கை ரீதியாக எந்தமாற்றமும் கொண்டு வரவில்லை. தற்போதைய புதியகல்வி கொள்கையில் தாய்மொழி வழிக் கல்வியை உறுதி செய்திருக்கிறோம்.

தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக இருக்கிறது திமுக. நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களுக்கு புகலிடமாக இருக்கிறது திமுக. இத்தகைய சக்திகளுக்கு தகுந்தபாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு ஜேபி நட்டா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...