விவசாயிகளுக்கு விடுதலை அளித்திருக்கிறார் மோடி

இந்தியாவின் வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், சென்ற 2019-20ஆம் ஆண்டில் இந்தியாவின் காய்கறிஉற்பத்தி 1,89,464 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். காய்கறிகளின் உற்பத்தி 2016-17ஆம் ஆண்டில் 1,78,172 ஆயிரம் டன்னாகவும், 2017-18ஆம் ஆண்டில் 1,84,041 ஆயிரம் டன்னாகவும், 2018-19ஆம் ஆண்டில் 1,83,170 ஆயிரம் டன்னாகவும் இருந்துள்ளது.

பூக்கள் உற்பத்தியைப் பொறுத்த வரையில், 2016-17ம் ஆண்டில் 2,392 ஆயிரம் டன்னாகவும், 2017-18ஆம் ஆண்டில் 2,631ஆயிரம் டன்னாகவும், 2018-19ஆம் ஆண்டில் 2,910 ஆயிரம் டன்னாகவும் இருந்தநிலையில், 2019-2020ஆம் ஆண்டில் பூக்கள் உற்பத்தி 2,994 ஆயிரம்டன்னாக அதிகரித்துள்ளது. வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்து பேசிய நரேந்திரசிங் தோமர், ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு ரூ.132.54 கோடியும், குஜராத்மாநில விவசாயிகளுக்கு ரூ.18.74 கோடியும் 2019-20ஆம் ஆண்டில் நிவாரணமாக வழங்கப்பட்டதாகக் கூறினார்.

2019-20ஆம் ஆண்டில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், பீகார், ஹரியானா மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல்நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டம் குறித்துப் பேசுகையில், 2020 ஆகஸ்ட் 31 வரையில் மொத்தம் 1.67 கோடி விவசாயிகள், 1.44 லட்சம் வியாபாரிகள், 83,958 முகவர்கள் மற்றும் 1,722 விவசாய உற்பத்தி நிறுவனங்கள் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாகவும், இத்தளத்தின்மூலம் மொத்தம் ரூ.1,04,313 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

பயிர் விதைப்பைப் பொறுத்தவரையில், 2020 செப்டம்பர் 18 நிலவரப்படி 1,113.63 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காரிஃப் பயிர்கள் பயிரிடப் பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதேகாலத்தில் 1,053.52 லட்சம் ஹெக்டேர் மட்டுமே பயிரிடப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் 5.71 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் மசோதா நிறைவேறியதற்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மகிழ்ச்சி தெரிவித்தார். விவசாயிகளுக்கு பிரதமர் மோடி விடுதலை வாங்கி கொடுத்துள்ளார் எனவும் இதற்காக ஒவ்வொருவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும் . காங்கிரஸ் கட்சி தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இந்தவிவசாய சீர் திருத்தங்களை கூறியதாகவும் ஆனால் ஒருபோதும் இதை செயல்படுத்தும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அந்தகட்சிக்கு இருந்ததே இல்லை எனவும் அமைச்சர் நரேந்திர சிங் குற்றஞ்சாட்டி உள்ளார்.

விவசாயிகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு மசோதா 2020- “தங்குதடையில்லா வர்த்தகத்துக்கு வழிவகுக்கும்”

முன்னதாக, விவசாயிகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அமைச்சர் நரேந்திர சிங் தாக்கல்செய்த அந்த மசோதாவில், விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் நோக்கில், மசோதாக்களை தாக்கல் செய்து உள்ளதாகவும், இதன் மூலம் விளை பொருட்களின் தடையற்ற வர்த்தகத்துக்கு வழிவகுக்கும் என்றும், தங்கள் விருப்பம்போல் விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட அதிகாரம் அளிக்கும் என்று கூறப்பட்டது. தங்கு தடையில்லா வர்த்தகம் மூலம், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்றும், இதற்காக ஜூன் 5ஆம் தேதி அவசரசட்டதை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...