தி.மு.க.வை தோற்கடிக்க எதிர் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும் ; இல கணேசன்

வரவிருக்கும் சட்ட பேரவைத் தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க எதிர் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும் என பாரதிய ஜனதா தேசிய செயற்க்குழு உறுப்பினர் இல கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :

தி.மு.க ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே உருவாகியுள்ளது . நெருக்கடிநிலைமை அமலில் இருந்தபோது கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்திராகாந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. அதுபோன்று இப்போதும் நடந்தால் தான் தி.மு.கவை தோற்கடிக்க முடியும்.எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் போக்குவரத்து தொழிலாளர் சங்க தேர்தலில் தி.மு.கவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

முதல்வர் கருணாநிதி சாதிப்பெயரை சொல்லி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை திசை திருப்பு முயற்சியில் ஈடுபடுகிறார். வராலற்று ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்ட ஆரியம் – திராவிட சித்தாந்தத்தை கூறி மக்களை திசைதிருப்பும் முயற்சி இனி தமிழகத்தில் எடுபடாது.ஊழல் விவகாரதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்க பட வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தை பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் முடக்கி வருகின்றன.நாடாளுமன்ற கூட்டு குழுவால் மட்டுமே பிரதமர் உள்ளிட்ட செல்வாக்கு மிக்கவர்களை விசாரித்து உண்மையை வெளிக் கொண்டுவர முடியும். உண்மை வெளிவந்துவிடும் என்பதால்தான் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட காங்கிரஸ் தயக்கம் காட்டிவருகின்றது.

விரக்தியில் இருந்த நாட்டுமக்களுக்கு பிகார் தேர்தல் முடிவு நம்பிக்கையை தந்துள்ளது. இது 2014 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என நம்பிக்கை உருவாகியுள்ளது .பிகார் மாநிலத்தில் தனித்து போட்டியிட்டதன் மூலம் காங்கிரஸ்கட்சியின் செல்வாக்கு தெரிய வந்தது. அதுபோல தமிழகத்திலும் அக்கட்சி தனித்து போட்டியிட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு தெரிய வரும்.

சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவது போல இந்து மாணவர்களுக்கும் கல்விஉதவி தொகை வழங்க வலியுறுத்தி தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பிரசாரயாத்திரை மேற்கொண்டுள்ளார். அதற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.யாத்திரையின் நிறைவாக 2011 ஜனவரி 29ம் தேதி சென்னையில் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் இல. கணேசன். பேட்டியின்போது பாரதிய ஜனதா மாநில துணை தலைவர்கள் டாக்டர். தமிழிசை சௌந்திரராஜன், திருமலைச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...