2024-ம் ஆண்டில் நடக்க விருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாகட்சி சார்பாக 400 எம்.பி-க்கள் இருப்பார்கள். அவர்களில் 25 பேர் தமிழ் நாட்டிலிருந்து பாரதிய ஜனதா சார்பாக வென்ற வர்களாக இருப்பார்கள்” என்று அண்ணாமலை பேசினார்.
மோடி அரசின் எட்டு ஆண்டுச்சாதனையை விளக்கும் பொதுக் கூட்டம் நெல்லை மாவட்டம், செட்டிகுளம் பண்ணையூரில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அண்ணாமலை் பேசுகையில், “22 ஆண்டுக்கால அரசியல்வாழ்க்கையில் 14 ஆண்டுகள் முதல்வராகவும், எட்டு ஆண்டுகள் பிரதமராகவும் இருப்பவர்மோடி. இதுபோல் இந்தியாவில் வேறு யாரும் மக்களின் அமோகஆதரவுடனும், செல்வாக்குடனும் இருந்ததில்லை. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை அதிகப்படுத்தி யிருப்பவர் மோடி.
2024-ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் 400 எம்.பி-கள் வெற்றிபெற வேண்டும். அவர்களில் 25 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மோடி மூன்றாவதுமுறையாக ஆட்சி அமைப்பார். அந்த அமைச்சரவையில் கேபினட் அமைச் சர்களாகத் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் அரசியலை மாற்றவேண்டிய கட்டாயத்தில் நாம்இருக்கிறோம். தமிழ்நாட்டின் அரசியலை நமக்குப் பிடிக்கவில்லை. ஊழல்நிறைந்த அரசியலாக உள்ளது. கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் கரன்ட்டிலும்கூட தி.மு.க-வினர் ஊழல் செய்கிறார்கள். ஊழல் பெருச்சாளிகளைக் கொண்டு தி.மு.க அரசு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும்.
மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு 45 கோடி நபர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்துக் கொடுக்கப் பட்டதுடன், 45 கோடி மக்களின் ஜன்தன்கணக்கில் 22 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்தியில் எட்டு ஆண்டுகள் எந்தப்பிரச்னையும் இல்லாமல் அமைச்சரவை சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.
கடந்த எட்டு ஆண்டுக்கால பாரதிய ஜனதா ஆட்சியில் ஓர்அமைச்சர் ஊழல் செய்தார் என்று சொல்லமுடியாத அளவுக்கு மோடி நேர்மையாக ஆட்சி செய்து வருகிறார். கடந்த 400 ஆண்டுகளில் இந்தியா இழந்ததை பிரதமர் மோடி எட்டு ஆண்டுகளில் திரும்பப்பெற்றுக் கொடுத்துள்ளார். வரும் காலங்களில் இந்தியாவுக்கு வெளிநாட்டவர்கள் வேலைதேடி வருவார்கள். அந்த அளவுக்கு அறவழியில் மத்தியில் ஆட்சி நடக்கிறது” என்று பேசினார்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |