5 ஆண்டுகளில் தங்கவங்காளம் உருவாகும்

மோடியின் ஆட்சி மேற்குவங்கத்திலும் அமைவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும், பாஜக ஆட்சியமைக்கும், 5 ஆண்டுகளில் தங்கவங்காளம் உருவாகும் என பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறினார்.

மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில் 200 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என்று பாஜக சூளுரைத்துத் திட்டம்தீட்டி செயல்பட்டு வருகிறது. அதேசமயம் முதல்வர் மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பாஜகவுக்கு கடும் போட்டியளித்து வருகிறது.

இந்தச்சூழலில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா 2 நாட்கள் பயணமாக மேற்குவங்கம் சென்றுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில் பாஜக 200 இடங்களை கைபற்றி ஆட்சியமைக்கும். இது நாங்கள் புன்னகைசெய்யும் நேரம். ஏனெனில் மம்தா பானர்ஜியின் ஆட்சி முடிவுக்குவருகிறது.

மோடியின் ஆட்சி மேற்குவங்க மாநிலத்திலும் அமைவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். வளர்ச்சிதிட்டங்கள் நிறைவேற ஆதரவு தர வேண்டும்.

காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இதுவரை வாய்ப்பு கொடுத்த மேற்குவங்க மக்கள் இந்தமுறை பாஜகவுக்கு வாய்ப்பு தர வேண்டும். வங்கம் இழந்த பெருமையை மீட்டெடுக்கும். 5 ஆண்டுகளில் தங்கவங்காளம் உருவாகும்.

வாரிசு அரசியலுக்கும் வளர்ச்சி அரசியலுக்கும் நடக்கும்போர் இந்த தேர்தல். ஊருவல் காரர்களிடம் இருந்து வங்கத்தை மீட்டெடுப்போம்.

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கொல்ல படுகின்றனர். கடந்த ஓராண்டில் பாஜக தொண்டர்கள் 100 பேர் கொல்ல பட்டுள்ளனர். வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு காட்டாச்சி நடைபெறுகிறது.

மம்தா பானர்ஜியின் அரசு மீது மேற்குவங்க மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இவர்கள் பாஜகவை இன்முகத்துடன் வரவேற்க தயாராக உள்ளனர்.’’ என கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வளர்ந்த இந்தியாவிற்கான விருப் ...

வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கன அடித்தளம் வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை ...

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி கடைசி நபரையும் சென்றடைந்தது முதலீடு மற்றும் கட்டமைப்பு ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல் பசுமை வளர்ச்சி இளைஞர் சக்தி ...

நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன ...

நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் பட்ஜெட் நம் நாட்டில் கடினமாக உழைக்கும் நடுத்தர வர்க்கத் தினருக்கு ...

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய் ...

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது படஜெட் மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டு க்கான பொதுபட்ஜெட்டை மக்களவையில் ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...