சொரணையற்றுப் போன சுயமரியாதை

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான கேஎன்.நேரு தனது பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றதை பாஜகவின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக முதன்மை செயலாளரும், மூத்த தலைவர்களுள் ஒருவருமான கேஎன்.நேரு அவரது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக திமுக. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்ற கே.என்.நேரு, பின்னர் அறிஞர் அண்ணா மற்றும் மறைந்த தலைவர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கும் சென்று மரியாதைசெலுத்தினார்.

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப் பட்டதிலிருந்தே அவர் மீது நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. அவருக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பிறந்த நாளை முன்னிட்டு கேஎன்.நேரு, உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த புகைப் படங்களை அவருடைய ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து, உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றபோது என குறிப்பிட்டுள்ளார்.

கே.என்.நேரு உதயநிதி ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவிக்கும் புகைப் படத்தையும், எல்.கே.அத்வானியின் பிறந்தநாளில் பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, ஆசிர்வாதம் பெற்றதையும் குறிப்பிட்டு, இரண்டு வெவ்வேறுகட்சிகளில் உள்ள வெவ்வேறு தலைவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஒருவர், அவரது ஆசானை சந்திக்க செல்வதாகவும் இன்னொருவர் கட்சியின் தலைமை யகத்துக்கு சென்று அடுத்த தலைமுறை தலைவரிடம் இருந்து ஆசிபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

One response to “சொரணையற்றுப் போன சுயமரியாதை”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...