மக்களின் கோரிக்கைகளை நிறைவேறுங்கள், ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை

நேற்று கோவையில் திமுகவின் முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது, இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலவர் ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்.. “தி.மு.க தனது நிர்வாக தோல்விகளை மறைத்து, மாநிலமக்களுக்கு எந்த அக்கறையும் இல்லாத விஷயங்களைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டத்தில் நேற்று, இந்தியா  கூட்டணி காட்சிகளை போல முதலவர் ஸ்டாலின் அவர்களும் பாஜக மீது “தார்மீக வெற்றி” பெற்றுள்ளதாக பேசியுள்ளார்.

மோடியின் வாழ்க்கையைப் பற்றியும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அவர் கொண்டுள்ள மரியாதையைப் பற்றியும் தமிழக முதல்வருக்கு நினைவூட்டுவது எனது கடமை. ஆனால் இந்தியா கூட்டணிக்கு அரசியல் சாசனம் என்பது எப்பொழுது எங்கு ஆட்சியில் இருந்தாலும் மிதிக்கக் கூடிய ஒரு துண்டு காகிதமே தவிர வேறில்லை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர் அங்கம் வகிக்கும் இந்தியா  கூட்டணி, நாடு முழுவதும் உள்ள சந்தர்ப்பவாதிகள் மற்றும் ஊழல்வாதிகளின் கூட்டமைப்பாகும். அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு இந்தத் தேர்தலில் பாஜக வென்ற இடங்களின் எண்ணிக்கையை இன்னும் தாண்ட முடியவில்லை. ஐ.என்.டி.ஐ கூட்டணியில் குறைந்தபட்சம் ஒரு எம்.பி.யை வைத்திருக்கும் 13 கட்சிகளும் மொத்தம் 232 இடங்களைக் கொண்டிருக்கின்றன, இன்னும் எங்கள் தனிக் கட்சியைக் கடக்க முடியவில்லை” என்றார் அண்ணாமலை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை ...

பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் கிரிராஜ் சிங் புதுதில்லியில் உள்ள யஷோ பூமி மாநாட்டு மையத்தில் 71-வது ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட் ...

நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பயிற்சி இயக்கம் தொடங்கப்பட்டது பருவமழை வருவதையடுத்து தூய்மை மற்றும் துப்புரவின் சவால்கள் அதிகரித்துள்ளன. ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அண ...

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்திதிறன் 70 சதவீதம் அதிகரிக்கும் மத்திய அணுசக்தி துறை இணை  அமைச்சர்  கூறியுள்ளா நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தித்திறன் 70 ...

அவசரநிலைக் காலத்தில் மோடி

அவசரநிலைக் காலத்தில் மோடி அவசரநிலை காலத்தில் அரசியல்ரீதியான கைதுகள் நடத்தபட்டதால், அப்போது இளைஞராக ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வா ...

ஜிஎஸ்டி140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது ஏழுவருட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையானது, 140 கோடி இந்தியர்களின் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங் ...

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியது புகையிலை பயன்பாடு இந்தியாவில் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்களுக்கான ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...