அதிமுகவில் இருமுறை எம்எல்ஏ.வாகவும் திமுகவில் ஒருமுறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்தவர் கே.பி.ராமலிங்கம். திமுக.,தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அவருக்கு எதிராகக் குரல்கொடுத்தார். இதனால், திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் கே.பி.ராமலிங்கம். இவர் மு.க.அழகிரியின் ஆதரவாளராகவும் இருந்தவர் ஆவார். இந்நிலையில் கேபி. ராமலிங்கம் தமிழக பாஜக மேலிடபொறுப்பாளர் சி.டி ரவி முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்தபிறகு கே.பி.ராமலிங்கம் பேசுகையில், “திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்குபிறகு கட்சியின் தலைமையை ஏற்கும் மனப்பக்குவம் எனக்கு இல்லை. அதனால் பாஜகவில் இணைந்தேன். புதிதாக என்னுடைய அரசியல்பயணத்தை தொடங்கியுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் செய்திதொலைக்காட்சி ஒன்றுக்கு கே.பி.ராமலிங்கம் அளித்துள்ள பேட்டியில், “நான் பாஜகவில் இணைவதற்கு முக. அழகிரி எனக்கு வாழ்த்துதெரிவித்தார். மு.க. அழகிரி புதிதாக கட்சிதொடங்கும் முடிவில் இருக்கிறார். ஆனால், அவரை நான் பாஜகவில் இணைய அழைப்புவிடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |